முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார்

டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28, 2020) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2020, 01:54 PM IST
  • முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளார்.
  • 84 வயதான பிராணாப் முகர்ஜீ, இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவர்.
  • ஜூலை 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ தொடர்ந்து கோமா நிலையில் உள்ளார் title=

டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28, 2020) முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

84 வயதான மூத்த அரசியல்வாதி தீவிர சிகிச்சையில் உள்ளார் மற்றும் நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பிற்காக சிகிச்சை பெற்று வருவதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றாவை சீராக இருப்பதாக மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

84 வயதான முகர்ஜி ஆபத்தான நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் முகர்ஜியின் மூளையில் ஒரு பெரிய உறைவு  இருப்பது தெரியவந்தது, அதற்காக அவர் அவசரகால உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் கோவிட் -19  தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. "ஒரு சிகிசைக்காக மருத்துவமனைக்கு வந்த நிலையில், எனக்கு இன்று கோவிட் -19  தொற்று உறுதியானது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு, கோவிட் -19 க்கு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் " என ஆகஸ்ட் 10 அன்று முகர்ஜி ட்வீட் செய்திருந்தார்.

இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். ஜூலை 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.

மேலும் படிக்க | முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று..!!!

Trending News