என்ன செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த 4 மேஜிக் உணவுகளை சாப்பிடுங்க போதும்... உடனே குறையும்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிகள் அவசியம்தான். ஆனால், உணவு கட்டுப்பாடும் இதில் மிக அவசியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2024, 10:58 AM IST
  • சர்க்கரைவள்ளிக்கிழங்கு நிலத்தில் விளையும் ஒரு சிறந்த வேர் காயாகும்.
  • இதை தினமும் சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும்.
  • இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.
என்ன செய்தாலும் எடை குறையவில்லையா? இந்த 4 மேஜிக் உணவுகளை சாப்பிடுங்க போதும்... உடனே குறையும் title=

Weight Loss Tips: இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பருமனால் அவதியில் உள்ளனர். எடை அதிகரிப்பு இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. இது பல நாடுகளில் கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம்மால் நம்மை சரியாகக் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை, உடல் செயல்பாடுகள் இல்லாத நிலை ஆகியவற்றால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. 

உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிகள் அவசியம்தான். ஆனால், உணவு கட்டுப்பாடும் இதில் மிக அவசியமாகும். உங்கள் உணவைக் கட்டுப்படுத்தாமல், ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால், எடை இழப்புக்கு நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கையான எளிய வழிகள் பற்றி உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ளார். அதை பற்றி இங்கே காணலாம்.

எடை இழப்பு உணவுகள்

சூப்

இந்தியாவில், நாம் திரவ உணவுகளைக் காட்டிலும் திட உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். இதன் காரணமாக உணவின் செரிமானம் தாமதமாகிறது. இதனால் எடை அதிகரிக்கிறது. இதற்கு பதிலாக, முடிந்தவரை அதிகமாக சூப் (Soup) குடிக்கவும். இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கும். மேலும் செரிமானமும் நன்றாக இருக்கும். இதில் காய்கள், மூலிகைகள், மசாலாக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுவதால், இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

மேலும் படிக்க | மள மளன்னு ஏறிய வெயிட்... சட்டென்று குறைய... இந்த வெள்ளை உணவுகளுக்கு நோ சொல்லுங்க

முள்ளங்கி
முள்ளங்கி பொதுவாக குளிர்காலத்தில் வளர்க்கப்படும் ஒரு தாவரமாகும். இந்த பருவத்தில், மனித உடல் செயல்பாடு குறைகிறது. இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. ஆகையால், இந்த காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ல கலோரிகளின் அளவு குறைவு. மேலும், இது கொழுப்பை அதிகரிக்காது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு 
சர்க்கரைவள்ளிக்கிழங்கு நிலத்தில் விளையும் ஒரு சிறந்த வேர் காயாகும். இதை தினமும் சாப்பிட்டால் வயிறு நிறைந்திருக்கும். இதனால் பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இது தவிர, சர்க்கரைவள்ளிக்கிழங்கில் அதிக நார்ச்சத்தும் உள்ளது. இதன் காரணமாக எடை இழப்பில் உதவி கிடைக்கின்றது.

சிட்ரஸ் உணவுகள்
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் டேன்ஜரைன்கள் போன்ற சிட்ரஸ் உணவுகள் (Citrus Foods) பொதுவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உட்கொள்ளப்படுகின்றன. வைட்டமின் சி பெற இவை உண்ணப்படுகின்றன. இவை எடை இழப்பிலும் அதிக பங்கு வகிக்கின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வாயுத்தொல்லை பிரச்சனையா? இந்த இயற்கையான வழிகளில் நிவாரணம் காணலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News