பருமன் குறைய... செரிமானம் சிறப்பாக இருக்க... நார்சத்து நிறைந்த சில சூப்பர் உணவுகள்

Fiber Rich Food For Weight Loss: சிறந்த செரிமானத்திற்கு, நார்ச்சத்து நிறைந்த உணவு டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ளவும் முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 16, 2024, 10:57 PM IST
  • குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ள முடியும்.
  • தினசரி டயட்டில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்து வந்தால், கொழுப்பு கரைந்து பிட் ஆக இருக்கலாம்.
  • குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சிறந்த நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.
பருமன் குறைய... செரிமானம் சிறப்பாக இருக்க... நார்சத்து நிறைந்த சில சூப்பர் உணவுகள் title=

Fiber Rich Food For Weight Loss: சிறந்த செரிமானத்திற்கும் உடல் கொழுப்பை எரிக்கவும், நார்ச்சத்து நிறைந்த உணவு உங்கள் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ளவும் முடியும். நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது நம் உடல் சரியாக செயல்பட உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உங்கள் தினசரி டயட்டில் நீங்கள் இதனை சேர்த்து வந்தால், கொழுப்பு கரைத்து பிட் ஆக இருக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த சில உணவுகள்

நட்ஸ் மற்றும் விதைகள்

ஆளி விதைகள், பாதாம், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நார்ச்சத்து மட்டுமல்ல, அதிக அளவு ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதமும் கிடைக்கும். இவற்றை ஏதோ ஒரு வகையில் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம், செரிமானம் மேம்பட்டு, உடல் எடையை குறைக்க பெரிதும் (Weight Loss Tips) உதவுகிறது. அவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்கும், எலும்புகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகளையும் நட்ஸ்களையும் உங்கள் சாலட், ஸ்மூத்தி அல்லது தயிர் ஆகியவற்றில் கலந்து சாப்பிடுவது செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவும்.

முழு தானியங்கள்

பார்லி, ஓட்ஸ் மற்றும் கினோவா போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வையும் தருகிறது. இவை செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அதில் புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உளுத்தம்பருப்பு, பட்டாணி, கிட்னி பீன்ஸ் மற்றும் துவரம் பருப்பு போன்ற பயறு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலுக்கும் ஊட்டமளிக்கிறது.

பழங்கள்

ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் மற்றும் பெர்ரி பழங்களில் நிறைய நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த பழங்கள் உடலை நீரேற்றமாகவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதை விட பழத்தை முழுமையாக சாப்பிடுவதால், அதிகபட்ச நார்ச்சத்து உடலுக்கு கிடைக்கும். எனவே பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை உட்கொள்ள வேண்டும். இது உங்கள் செரிமானத்தை வலுப்படுத்தும்.

மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்

கீரை வகைகள்

கீரை வகைகளிலும், பச்சை இலை காய்கறிகளிலும் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இந்த காய்கறிகள் எளிதில் ஜீரணிக்கக் கூடியவை. அவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தினசரி உணவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது உடல் எடைய குறைய பெரிதும் உதவும்.

பீன்ஸ் வகைகள்

ராஜ்மா, காராமணி, பீன்ஸ், பயறு போன்ற பீன்ஸ் பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இதன் காரணமாக வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். அடிக்கடி பசி ஏற்படாது. இதனை உட்கொள்வதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன் உடல் எடையை சிறப்பாக குறைக்கவும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News