எடை இழப்புக்கான எளிய குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதிகரிக்கும் எடையால் உடல் தோற்றம் கெட்டுப்போவதுடன், இது ஆரோக்கியத்திலும் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தங்கள் அதிகரித்த எடையைக் குறைக்க, மக்கள் உணவுக் கட்டுப்பாடு முதல் உடற்பயிற்சி வரை அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இவ்வளவு உழைத்தும் எடை குறைவதில்லை. ஆனால் எடையை குறைக்க இவ்வளவு கடினமான முறைகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க கலோரி எண்ணிக்கை மிகவும் முக்கியமானது. நீங்கள் அதிக கலோரிகளை எடுத்துக் கொண்டால், எடை வேகமாக அதிகரிக்கிறது. மறுபுறம், நீங்கள் குறைந்த அளவு கலோரிகளை உட்கொண்டால், அது எடையைக் குறைக்க உதவும். சில காய்கறி சாறுகளை உணவில் சேர்த்துக்கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இவற்றை வழக்கமாக உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இது கொழுப்பை வேகமாக எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் 5 காய்கறி சாறுகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுரைக்காய் சாறு
சுரைக்காய் சாறு எடையைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதை குடிப்பதால் மீண்டும் மீண்டும் பசி ஏற்படாது. இதனால் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதுமட்டுமின்றி, சுரைக்காய் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கேரட் சாறு
கேரட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது எடையை குறைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள கலோரிகளின் அளவும் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கேரட் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க | உடல் எடை சட்டுனு குறைய... தூங்க செல்லும் முன் இந்த 8 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
பீட்ரூட் சாறு
உடல் எடையை குறைக்க பீட்ரூட் சாற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், எடை குறைப்பதோடு செரிமானத்திற்கும் இது உதவுகிறது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவுகிறது. இது உடலில் உள்ள இரத்த சோகையை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
தக்காளி சாறு
தக்காளி சாறு உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். ஒரு ஆய்வின் படி, தொடர்ந்து தக்காளி சாறு குடிப்பதால் இடுப்பு மற்றும் தொப்பை கொழுப்பை குறைக்கலாம். தக்காளி சாறு சுவையாக இருக்க, நீங்கள் வெள்ளரிக்காய், புதினா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை இதில் கலந்து ஜூஸ் தயார் செய்யலாம்.
கீரை சாறு
உடல் எடையை குறைக்க கீரை சாறு சாப்பிடலாம். இதில் தைலாகாய்டு உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரத்த சோகையை நீக்குகிறது. அதன் வழக்கமான உட்கொள்ளல் மூலம் எடை கட்டுப்பாடு பராமரிக்கப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | படுக்கையறையில் ஆற்றலை அதிகரிப்பது எப்படி? இதோ சிறந்த வழிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ