அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

புரதத்தின் பக்க விளைவுகள்: தேவைக்கும் அதிகமாக புரதத்தை உட்கொள்வதால் ஆரோக்கியத்திற்கு என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 19, 2022, 03:20 PM IST
  • நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இதய நோயாளிகள் அதிக புரதத்தை உட்கொள்ளக்கூடாது.
  • நமது உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை.
அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்! title=

தேவைக்கு அதிகமான புரத உணவு பக்க விளைவுகள்: ஆரோக்கியமாக இருக்க, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது தவிர, நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை. உங்கள் தசைகளின் வளர்ச்சிக்கும் புரதம் மிகவும் முக்கியமானது. தசை வளர்ச்சிக்காக, சிலர் அதிக புரதத்தை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது. அதிகப்படியான புரதத்தை சாப்பிடுவது உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும். புரதச்சத்து அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இதயத்திற்கு சேதம்

தேவைக்கு அதிகமாக புரோட்டீன் சாப்பிடுபவர்களுக்கு இதய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் இதய நோயாளிகள் அதிக புரதத்தை உட்கொள்ளக்கூடாது.

சிறுநீரகத்தை பாதிக்கும்

புரோட்டீன் அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லதல்ல. உடலில் புரதத்தின் அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகம் நைட்ரஜனை விரைவாக வெளியேற்றாது. அதனால்தான் ஏற்கனவே சிறுநீரக நோய் உள்ளவர்கள் அதிக புரதத்தை உட்கொள்ளக்கூடாது. இதுமட்டுமல்லாமல், இதனை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரகத்தில் கல் பிரச்சனையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

எலும்புகள் பலவீனமடையும்

அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது உங்கள் எலும்புகளையும் பாதிக்கிறது. அதிக புரதச்சத்து சாப்பிடுவதால் எலும்புகளில் வலி ஏற்படுகிறது. உடலில் புரதத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது கால்சியத்தின் அளவைக் குறைக்கிறது.  இதனால் எலும்புகள் பலவீனமடைகின்றன.

எடை அதிகரிப்பு பிரச்சனை

பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க அதிக புரதத்தை உட்கொள்கிறார்கள், ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், எடை இழப்புக்கு பதிலாக எடை அதிகரிக்கும். இது உடலுக்கு தவறான வடிவத்தை தரக்கூடியது. எனவே நீங்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீரிழப்பு பிரச்சனை

தினசரி உணவில் அதிக புரதத்தை உட்கொள்வது நீரிழப்புக்கு வழிவகுக்கும். புரதத்தை ஜீரணிக்க உடலுக்கு நிறைய தண்ணீர் தேவை. இது சிறுநீர் வடிவில் உடலில் இருந்து வெளியேறுகிறது, அதே நேரத்தில் தண்ணீரும் அதிக அளவில் வெளியேறுகிறது. இதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News