ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பனீரை எப்படி சாப்பிடக்கூடாது? பனீரின் கருப்புப் பக்கம் இது!

Eating Raw Paneer : பனீரை சமைக்காமல் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதும், அடிக்கடி உண்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக சிதைத்துவிடும் என்பது தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2024, 06:16 PM IST
  • பனீரா இருந்தாலும் அளவோட சாப்பிடுங்க! ஹெல்த் அலர்ட்!
  • பனீரை சமைக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு
  • ஆரோக்கியத்தை சிதைக்கும் பனீர்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பனீரை எப்படி சாப்பிடக்கூடாது? பனீரின் கருப்புப் பக்கம் இது! title=

பனீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, இதனை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் குணமாகும். அதிலும் சைவ உணவு உண்பவர்களுக்கு தேவைப்படும் புரதத்தைக் கொடுக்கும் பனீர் மிகவும் ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகம் இல்லை.  பல வகையான பிரச்சனைகளை குறைக்க பனீரை சாப்பிடுவது நல்லது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாக இருக்கும் பனீர், எடை குறைப்பதிலும் (Weight Loss) முக்கிய பங்கு வகிக்கிறது. பனீரில் உள்ள புரதத்தில் உள்ள கலோரிகளின் அபரிமிதமான அளவின் காரணமாக, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வேகமாக எரிந்து உடல் எடை குறையும்

இப்படி பல நன்மைகள் இருந்தாலும், ஆனால், பனீரை சமைக்காமல் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதும், அடிக்கடி உண்பதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக சிதைத்துவிடும் என்பது தெரியுமா?

அதிக அளவில் பனீர் சாப்பிடுவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது, பனீர் என்ற புரதம் நிறைந்த உணவுக்கும் பொருந்தும். சமைக்காத பனீர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

செரிமான பிரச்சனைகள்
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீரில் லாக்டோஸ் அதிகமாக உள்ளது, எனவே அதிகமாக பனீர் உட்கொண்டால், அது வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு உருவாவதற்கு வழிவகுக்கும். அதுவும் பனீரை சமைக்காமல் அப்படியே சாப்பிடிவதால் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படும். அதோடு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே பனீரை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வழி இருக்கா? இது தெரியாம போச்சே..

கொலஸ்ட்ரால் அதிகரிப்பு
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பனீர் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிலும் பனீர் சமைக்காமல் சாப்பிடும்போது, மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கச் செய்யும் பனீரை சமைக்காமல் உண்ண வேண்டாம்.

உடல் எடையை கூட்டுமா பனீர்
பனீர் வயிற்றில்  பசி எடுக்காமல் பாதுகாப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காது என்பதால், உடல் எடை குறையும் என்று சொல்லும் அதேவேளையில், இந்த விஷயம் பசிக்கு சாப்பிடுபவர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால், நேர-நேரத்திற்கு சாப்பிட வேண்டும், அதிலும் பசி இருக்கிறதோ இல்லையோ சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், பனீரை அதிக அளவில் உட்கொள்வது உடல் எடையை கணிசமாக அதிகரிக்கிறது. ஏனென்றால், இதில் கொழுப்பு உள்ளது, இது உடல் எடையை அதிகரிக்கும்.  

ஒவ்வாமை பிரச்சினைகள்
பனீரை சமைக்காமல் உட்கொள்வது ஒவ்வாமை பிரச்சனைகளை அதிகரிக்கும்.அதிலும், விரைவில் கெட்டுப் போகும் தன்மை கொண்ட பனீர் உடனடியாக பயன்படுத்தாமல் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பதால், பனீர் பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.  

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Fig Fruit : இரத்தசோகை முதல் ஆண்மைக் குறைவு வரை மோசமான நோய்களையும் சீராக்கும் அத்திப்பழம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News