வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட வேண்டியவை, கண்டிப்பா immunity அதிகரிக்கும்

Foods to Eat Empty Stomach: காலையில் அவசரத்துக்கு மத்தியில் காலை உணவைச் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றால், காலையில் வெறும் வயிற்றில் இவற்றைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2021, 11:05 AM IST
வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட வேண்டியவை, கண்டிப்பா immunity அதிகரிக்கும் title=

Foods to Eat Empty Stomach: காலை உணவுக்கு உங்களுக்கு நேரம் இல்லையா? உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடாமல் அலுவலகத்திற்கு ஓட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உணவியல் நிபுணரின் கூற்றுப்படி, வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு காலையில் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது முக்கியமானது. ஆனால் உங்களுக்கு காலை உணவுக்கு நேரமில்லை என்றால், இந்த சில உணவிகளை காலையில் வெறும் வயிற்றில் (Empty Stomach) சாப்பிடுவதன் மூலம், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதோடு, உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

ஊறவைத்த பாதாம்:
பாதாமில் (Badam) மெக்னீசியம், வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், நீங்கள் பாதாமை தவறான வழியில் சாப்பிட்டால், அது தவறான விளைவையும் ஏற்படுத்தும். பாதாமை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவதே சரியான வழி. அதன் தோலை நீக்கவும். இதை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

ALSO READ | Health News: மூட்டு வலிக்கான ருசியான நிவாரணம், மஞ்சள் ஊறுகாயின் recipe!

வெதுவெதுப்பான நீர் மற்றும் தேன்:
தேனில் தாதுக்கள், வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கும். வெறும் வயிற்றில் தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிட்டால் நச்சுப் பொருட்கள் வெளியேறும். 

திராட்சை:
திராட்சையில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. பாதாம் பருப்பைப் போலவே, திராட்சையையும் ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இது அதில் உள்ள ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது. திராட்சையில் இயற்கையான இனிப்பு உள்ளது, இது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 

பப்பாளி:
காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறி வயிறு நன்றாக இருக்கும். கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. பப்பாளி சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ளுங்கள்.

தர்பூசணி:
தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. எனவே, இதனை காலையில் சாப்பிட்டு வந்தால், நாள் முழுவதும் உடலில் நீர்ச்சத்து குறையாது, நீரேற்றத்துடன் இருப்போம். 

ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News