இந்த ஜூஸை தினமும் குடித்தால் இதய நோய்கள் வராதாம்

இதய நோய்கள் மற்றும் ரத்தம் அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தக்காளி ஜூஸ் தினமும் குடிக்க வேண்டுமாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 1, 2022, 08:05 PM IST
  • வாழ்க்கை முறை மாற்றத்தால் அதிகரிக்கும் இதய நோய்கள்
  • முன்னெச்சரிக்கையாக இருக்க தக்காளி ஜூஸ் குடிக்கலாம்
  • தினமும் குடித்தால் இதய நோய் ஆபத்துகள் குறையும்
இந்த ஜூஸை தினமும் குடித்தால் இதய நோய்கள் வராதாம் title=

இந்தியாவில் அதிகரித்து வரும் பணி அழுத்தத்தால், மக்களின் வாழ்க்கை முறையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனுடன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, ஆரோக்கிய பாதிப்புகளையும் ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் இதய நோய், கொலஸ்ட்ரால் தொடர்பான நோய்களும் இளைஞர்களுக்கு ஏற்படுகின்றன. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தக்காளி ஜூஸ் சிறந்தது.

தினமும் தக்காளி ஜூஸ்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், உப்பு சேர்க்காமல் தக்காளி ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தக்காளி சாறு இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

மேலும் படிக்க | டீயுடன் பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை

ஆய்வு சொல்வது என்ன?

'ஃபுட் சயின்ஸ் & நியூட்ரிஷன்' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, சுமார் 184 ஆண்கள் மற்றும் 297 பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு உப்பு சேர்க்காமல் தக்காளி சாறு கொடுக்கப்பட்டது. ஜப்பானில் உள்ள டோக்கியோ மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆய்வு செய்தவர்களில் 94 பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிபி குறைந்தது தெரியவந்தது. 

அதிக கொலஸ்ட்ராலில் விடுபட

அந்த ஆய்வின் மற்றொரு முடிவில் அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்ட 125 பங்கேற்பாளர்களின் LDL கொலஸ்ட்ரால் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 155.0 mg-லிருந்து 149.9 mg-ஆக குறைந்துள்ளது. தக்காளி சாறு பல நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதையும் அவர்கள் அந்த ஆய்வில் நிரூபணம் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News