Benefits of Horse Gram: கொள்ளுப் பயறின் சூப்பர் நன்மைகள் தெரியுமா? உடல் பருமனை குறைக்கும் அருமருந்து…

கொள்ளு ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பயறு மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு முழுமையான உணவு தானியம். குறிப்பாக, கொழுப்பு சத்து அதிகமுள்ளவர்களிக்கு அருமருந்தாகிறது கொள்ளு...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 14, 2021, 02:53 PM IST
Benefits of Horse Gram: கொள்ளுப் பயறின் சூப்பர் நன்மைகள் தெரியுமா? உடல் பருமனை குறைக்கும் அருமருந்து… title=

கொள்ளு தின்றால் கொழுப்பு குறையும் என்பது முதுமொழியான பழமொழியாக இருக்கலாம். ஆனால், அறிவியல் ஆராய்ச்சிகளும் இது முதுமொழியல்ல, முற்றிலும் உண்மையான நவீன மொழி என்று சொல்கின்றன.

காணம், முதிரை என்றும அழைக்கப்படும் கொள்ளு, பல்வேறு ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் விளையும் கொள்ளு, மிகவும் சத்து வாயந்தது. கொழுப்பைக் குறைப்பதில் இதன் பங்கு மிகவும் அபரிமிதமானது. இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழி, கொழுப்பை குறைக்கும் தன்மை வாய்ந்தது கொள்ளு என்பதை உணர்த்துகிறது. 

இரும்புச்சத்து, பொட்டசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. கொள்ளு. சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேதத்தில் கொள்ளு மருந்தாகவும் பயன்படுத்தப்பகிறது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோய்க்கும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. ரத்தம் கட்டியானாலும், உறைந்து போனாலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. 

Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?

அதுமட்டுமல்ல, வயிற்றுப் பகுதியில் சதை மற்றூம் தொந்தி உள்ளவர்கள் தொடர்ந்து கொள்ளு பயன்படுத்தினால் இடுப்பு தசைகள் குறியும். இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும்  கொள்ளை வேகவைத்து அதன் தண்ணீரை குடித்தால், நீரை காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனைகள் அகலும். 

முளைக் கட்டியக் கொள்ளுப் பயறில் மேலும் அதிக சத்துக்கள் சேர்வதால், மருத்துவர்களும் கொள்ளு முளை கட்டி சாப்பிடச் சொல்வார்கல். கொள்ளை முளைக் கட்டுவதால், அதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகரிக்கும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் செரிமாணக் கோளாறுகள் குறையும், உடல்நலம் மேம்படும்.

கொள்ளு ரசத்தை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதை என்பதே உடலில் இருக்காது. கொள்ளு ரசம் செய்வது எப்படி தெரியுமா?

Read Also | Weight Loss: எடை இழப்பு மாத்திரைகள் பலன் தருமா? பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?

தேவையான பொருட்கள்: 

கொள்ளு – 50 கிராம்
புளி – சுவைக்கு ஏற்ப
தக்காளி - 2
மிளகு, சீரகம் – இரண்டும் சேர்ந்து ஒன்றரை தேக்கரண்டி
வர மிளகாய் – 4
பூண்டு – சுவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு - கால் தேக்கரண்டி

கொள்ளுப் பயறை கல் இல்லாமல் சுத்தம் செய்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் அதை குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிறகு கொள்ளை நன்றாக அரைத்துக் கொள்ளவும். கொள்ளு வேகுவதற்கும் அதிக நேரம் எடுக்கும். அரைபடுவதற்கும் நேரம் எடுக்கும். எனவே மிக்சியில் அரைத்துக் கொள்ளலாம்.

Also Read | சாபிட்டப் பிறகு வாந்தி வருவது போல் இருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் 

பிறகு, மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். 
புளியை கரைத்து தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  
ஒரு பாத்திரத்தில் நெய் விட்ட, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கிய பிறகு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் அரைத்த கொள்ளு, மற்றும் மிளகாய் கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இறுதியில் பூண்டை தட்டிப் போட்டு, கொத்தமல்லியை மெலிதாக நறுக்கி ரசத்தில் சேர்க்கவும். 

உடல் கொழுப்பைக் குறைக்கும், உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் கொள்ளு ரசம் தயார்.

சாதத்தில் சேர்த்து கொள்ளு ரசம் சாப்பிட சுவையாகவும் இருக்கும். கொள்ளை சூப்பாகவும் வைத்துக் குடிக்கலாம். வழக்கமாக சூப் செய்வது போலவே கொள்ளு சூப் செய்யலாம்.

ALSO READ | தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்தால் என்ன நன்மை தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News