Pregnancy and Peanuts: நிலக்கடலைக்கும் இனப்பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

தாயின் கர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும், குழந்தையின் டி. என்.ஏ வளர்ச்சிக்கும் போலிக் ஆசிட் அவசியமானது. போலிக் ஆசிட் நிறைந்துள்ள உணவுப்பொருட்களில் நிலக்கடலை முதன்மையானது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2021, 10:04 AM IST
  • நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது
  • நீரழிவு நோயை தடுக்கும் நிலக்கடலை
  • நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புத்துளை நோய் வராது
Pregnancy and Peanuts: நிலக்கடலைக்கும் இனப்பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு தெரியுமா?  title=

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

எனவே, போலிக் ஆசிட் மாத்திரைகளை கர்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும், குழந்தையின் டி. என்.ஏ வளர்ச்சிக்கும் போலிக் ஆசிட் அவசியமானது. 

எனவே, போலிக் ஆட்சிடை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்வதைவிட, அது அதிகமாக இருக்கும் நிலக்கடலையை சாப்பிடுவதால், தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம் மேம்படும்.

அதுமட்டுமல்ல, நீரழிவு நோயை தடுக்கும் நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

READ ALSO | ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக புற்றுநோயைத் தடுக்கும் மாயம் என்ன?

பித்தப் பை கல்லைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது நிலக்கடலை.நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும் நிலக்கடலை உடல் எடையை அதிகரிக்கும் என்றால், சிலருக்கு உடல் எடை குறையவும் காரணமாகிறது மலலாட்டை என்னும் இந்த நிலக்கடலை. நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுத்து, மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்க நிலக்கடலை மிகவும் ஆற்றல் வாய்ந்தது. நிலக்கடலையில் இருக்கும் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் நோய் ஏற்படுவதை தடுப்பதுடன் இளமையை நீடிக்கச் செய்கிறது. 

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது நினைவுத்திறனை அதிகரிக்கவல்லது.

Also Read | Shocking Health Facts: அளவுக்கு மிஞ்சினால் வேம்பும் விஷமே!!

இவற்றைத் தவிர, தாமிரம், துத்தநாகம், ஒமேகா -3 என பல சத்துக்கள் உள்ளன. இவை, உடலுக்கு தீங்கு செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நிலத்தில் வேரில் விளையும் வேர்க்கடலைக்கு வட்டாரத்திற்கு ஏற்றாற்போல பல பெயர்கள் உண்டு. நிலக்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை, மல்லாட்டை என பல பெயர்களை பெற்றது நிலக்கடலை. நிலக்கடலையை அவித்தும் உண்ணலாம், வறுத்தும் உண்ணலாம், தின்பண்டங்கள் தயாரித்தும் சாப்பிடலாம். 

சரி, வேர்க்கடலை ஒரு உணவுப் பொருள் (Food) மட்டுமா, இதில் பொதிந்துள்ள சத்துக்களின் பட்டியல் மிக நீளமானது. புரதச்சத்து (Protein) உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் (nutrients) கொண்டுள்ள வேர்க்கடலை, நோய்களை நம்மிடையே அண்ட விடாமல் வேரறுக்கும்.  

அதுமட்டுமல்ல, பிற கொட்டைகளுடன் சேர்த்து வேர்க்கடலையும் உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தினசரி ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிடுவது, நமது உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்பதோடு, இருதய நோயின் (heart disease) அபாயத்தைக் குறைக்க உதவும்.

இவற்றைத் தவிர, தாமிரம், துத்தநாகம், ஒமேகா -3 என பல சத்துக்கள் உள்ளன. இவை, உடலுக்கு தீங்கு செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Also Read |  மூளை சுறுசுறுப்பாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News