உடலுக்கு பழ வகைகள் ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கக்கூடியது. அதில் கிவி பழம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி:
கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் கிவி பழங்களை சாப்பிடலாம்.
சரும நலன்:
கிவி பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் கிவி பழங்களை பழமாகவோ அல்லது சாறு பிழிந்தோ சாப்பிட்டால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்கள் புத்துணர்ச்சி அடைந்து தோல் பளபளப்பாகும்.
கண் பார்வை:
கிவி பழத்தில் வைட்டமின் "ஈ " சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
இதய நோய்க்கு:
கிவி பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். நரம்புகளில் ரத்தம் கட்டி கொள்ளாமல் கிவி பழம் செய்யும்.
நீரிழிவு நோய்:
பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. கிவி பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் கிவி பழம் தடுக்கிறது.
செரிமானம்:
அதேபோல், கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR