Mask vs Corona: கொரோனாவுக்கு அழைப்பு கொடுக்கும் மாஸ்க் மறுபயன்பாடு! நிபுணர்கள் எச்சரிக்கை!

ஒரே மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்துவது கொரோனாவில் இருந்து பாதுகாக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எவ்வளவு முறை ஒரே மாஸ்கை  பயன்படுத்தலாம்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2022, 10:32 AM IST
  • ஒரு மாஸ்கை எத்தனை முறை பயன்படுத்தலாம்?
  • மாஸ்கே கொரோனாவுக்கு அழைப்பிதழ் விடுக்கும் தெரியுமா?
  • முகக்கவசமே கொரோனாவின் இருப்பிடம்! எச்சரிக்கும் நிபுணர்கள்...
Mask vs Corona: கொரோனாவுக்கு அழைப்பு கொடுக்கும் மாஸ்க் மறுபயன்பாடு! நிபுணர்கள் எச்சரிக்கை! title=

புதுடெல்லி: கொரோனா வைரசின் தாக்கம் தொடங்கியதில் இருந்து அதில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் அடிப்படை பாதுகாப்பை கொடுப்பது, முகக்கவசமும், சமூக இடைவெளியும் தான்... 

ஆனால் அதை எத்தனை முறை மீண்டும் பயன்படுத்தலாம் என்பதும், அதை எப்போது மாற்ற வேண்டும் என்பதை அறிந்திருந்தால் தானே கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும்? கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க குறிப்பாக N95 முகமூடிகளை (Face Mask) அணிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 
 
ஒரே முகக்கவசத்தை தொடர்ந்து பல நாட்களுக்கு அணிகிறோம். வேறு சிலரோ, அல்லது பொருத்தமற்ற முகமூடிகளை அணிவார்கள். அத்தகைய முகக்கவசங்கள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதில்லை. எனவே முகக்கவசம் தொடர்பான நிபுணர்களின் அறிவுறுத்தல்களை அறிந்து வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ALSO READ | வைரஸ் வந்தால் ஒளிரும் முகக்கவசம்

அழுக்கான முகமூடிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவிப் பேராசிரியரான மைக்கேல் ஜி. நைட் கூறும் அறிவுறுத்தல் இது. முகக்கவசத்தை அணிந்து 45 நிமிடங்கள் வெளியே சென்று வந்த பிறகு அதை மீண்டும் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால், நாள் முழுவதும் அணிந்திருந்த முகக்கவசத்தை மீண்டும் பயன்படுத்தினால், அது கிருமித் தொற்றில் இருந்து பாதுகாக்காது.

N-95 முகமூடியை 5 முறைக்கு மேல் அணிய வேண்டாம்
ஒன்றுக்கு மேற்பட்ட முகமூடிகளை மாற்றி மாற்றி அணியவும். ஒரே மாஸ்கை நீண்ட நேரம் அணிந்து கொள்ளாதீர்கள். ஒரு நாளைக்கு சில மணி நேரம் மாஸ்க் (Face Mask) அணிந்தால் 4-5 நாட்களில் அழுக்காகிவிடும். CDC இன் படி, N-95 சுவாச முகக் கவசத்தை 5 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
முகமூடியைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கைகளை கழுவவும். முகக்கவசத்தின் earloops அல்லது எலாஸ்டிக் பேண்டில் கை வைத்து முகக்கவசத்தைக் கழற்றவும். மாஸ்கின் வெளிப்புறப் பகுதியைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

ALSO READ | உள்ளாடை மாஸ்க்? விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்

முகக்கவசத்தை எப்போது தூக்கி எறிய வேண்டும்?
முகக்கவசத்தின் நிலை மற்றும் அது நமக்கு பொருந்துவதன் அடிப்படையில் சரிபார்க்க முடியும். முகக்கவசத்தில் எங்காவது கிழிசலோ அல்லது அழுக்கோ இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம். அழுக்கு முகமூடிகளைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும். முகக்கவசம் அணிந்திருக்கும் போது நீங்கள் தும்மினால், அந்த மாஸ்கை  மீண்டும் அணிய வேண்டாம்.

முகக்கவசம் பாதுகாப்பதற்கான சரியான வழி
முகக்கவசங்களை காகிதப் பையில் வைப்பது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதுதான், மாஸ்கை வைத்திருக்க  சுத்தமான மற்றும் பாதுகாப்பான வழியாகும். முகக்கவசத்தில் ஈரப்பதம் ஏற்படாமல் இது பாதுகாக்கும். உலர்ந்த முகக்கவசங்களையே பயன்படுத்த வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | இந்த நாடுகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News