ஹை சுகர் பிரச்சனையா? அப்போ இந்த பழத்தின் தேநீர் நல்ல தீர்வாகும்

Amla Tea For Diabetes: பால், சர்க்கரை மற்றும் தேயிலை இலைகளுடன் கூடிய தேநீர் இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் சுகர் லெவலை கண்ட்ரோல் செய்யக்கூடிய நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீயை நீங்கள் குடித்திருக்கிறீர்களா? வாருங்கள் இதைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 19, 2023, 09:08 AM IST
  • சுகர் பேஷண்ட்ஸ் கவனிங்க, சர்க்கரை அளவை குறைக்க வழிகள்.
  • நார்மல் சர்க்கரை நோய் அளவு என்ன.
  • உடனடியாக சுகர் குறைய ஸ்பெஷல் மேஜிக் டிரிங்க்ஸ்.
ஹை சுகர் பிரச்சனையா? அப்போ இந்த பழத்தின் தேநீர் நல்ல தீர்வாகும் title=

நீரிழிவு நோய்க்கான நெல்லிக்காய் தேநீர்: நீரிழிவு நோய் என்பது விஞ்ஞானிகளால் இன்னும் திடமான சிகிச்சையைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயாகும். இரத்த சர்க்கரை அளவை சில பொருட்களின் உதவியுடன் கட்டுப்படுத்த முடியும், அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய் டீ ஆகும். பொதுவாக நமது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் அடிக்கடி நெல்லிக்காய்ப் பயன்படுத்துகிறோம், ஆனால் இது புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் டீ ஏன் நன்மை பயக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

நெல்லிக்காயில் காணப்படும் சத்துக்கள்
நெல்லிக்காய் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்பு சத்து, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் புரத சத்து போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. மேலும் நெல்லிக்காயை ஆயுர்வேதத்தின் பொக்கிஷம் என்றும் அது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | அழகை ரசிக்கறவங்க பாதாமை வேண்டான்னு சொல்வாங்களா? ஆரோக்கியத்திற்கும் பாதாம் 

நீரிழிவு நோய்க்கு நெல்லிக்காய் ஏன் பயனுள்ளதாக இருக்கும்?
நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நெல்லிக்காயில் காணப்படுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துகள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக குளுக்கோஸை வெளியிட வேலை செய்கின்றன. மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். இது தவிர, நெல்லிக்காயில் இருந்து குரோமியம் என்ற தாது கிடைக்கிறது, இது குளுக்கோஸ் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் நெல்லிக்காய் டீ குடிக்க வேண்டும்
இந்த நிலையில் நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், நெல்லிக்காய் டீ உங்களுக்கு ஒரு சஞ்சீவியாகும். இருப்பினும், நெல்லிக்காயை பச்சையாகச் சாப்பிடுவது, கல் உப்பைக் கலந்து சாப்பிடுவது, பொடியாக அரைத்து சாப்பிடுவது, நெல்லிக்காய் சாறு குடிப்பது போன்றவையும் லாபகரமான ஒப்பந்தமாக நிரூபிக்கப்படும்.

நெல்லிக்காய் டீ செய்வது எப்படி
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* இப்போது அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் நசுக்கிய இஞ்சியை கலக்கவும்.
* இப்போது புதினா இலைகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* பிறகு தேநீரை வடிகட்டி ஒரு கோப்பையில் பரிமாறவும்.
* இந்த டீயை நீங்கள் ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம்.

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News