நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!

நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரைப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை சாப்பிடும்  விஷயத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Last Updated : Feb 19, 2023, 07:57 PM IST
  • இனிப்புகள் என்று வரும்போது, ​​​​கவனமாக இருக்க வேண்டிய தேவை இன்னும் அதிகரிக்கிறது.
  • நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும், அவர்களின் நோயை பெரிதும் பாதிக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன! title=

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவும், அது சிறிய அளவிலானதாக இருந்தாலும், அவர்களின் நோயை பெரிதும் பாதிக்கிறது. மறுபுறம், இனிப்புகள் என்று வரும்போது, ​​​​கவனமாக இருக்க வேண்டிய தேவை இன்னும் அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள், இனிப்புகள் மற்றும் சர்க்கரையிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், சர்க்கரை உணவுகள் ஒருபுறம் இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட அளவு சர்க்கரையை உட்கொள்ளலாமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்வோம்.

இது குறித்து கருத்து கூறிய நிபுணர்கள், சர்க்கரை அளவு குறித்து சரியாக எதுவும் கூறி முடியாது. யார் எந்த அளவு சர்க்கரை எடுக்க வேண்டும் என்பது நீரிழிவு நோயாளிகளின் நிலையைப் பொறுத்தது. மேலும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இதில் முடிவு எடுக்க முடியும். சில சுகாதார நிபுணர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு அளவு சர்க்கரையை பரிந்துரைக்கிறார்கள். அதனால் அவர்களின் இரத்த சர்க்கரையில் நேரடி பாதிப்பு ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயாளிகள் குறைந்தபட்ச அளவு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘துத்தநாக’ குறைப்பாடு!

எந்த அளவு சர்க்கரையை தினமும் உட்கொள்வது பாதுகாப்பானது

AHA ஹார்ட் அசோசியேஷன், ஆண்கள் முதல் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வரை பெரியவர்களுக்கு பாதுகாப்பான பல்வேறு அளவு சர்க்கரையை பட்டியலிட்டுள்ளது. வயது வந்தவர்களில் ஆண்கள் ஒரு நாளைக்கு 36 கிராம் சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் எனவும்,  25 கிராம் பெண்கள் உட்கொள்வது பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கிறது. மறுபுறம், 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 24 கிராம் சர்க்கரை சாப்பிடுவது சரியான அளவாக இருக்கும் என கூறப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை விட குறைந்த அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் குளிர் பானங்கள் மற்றும் பிற குளிர்பானங்களை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News