உடலில் உள்ள நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். நச்சு என்பது நமது உடலை மட்டும் பாதிக்காமல் மனதிற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தி, காலப்போக்கில் நோய்க்கு வழிவகுக்கிறது.
மனம் தெளிவு இல்லாத நிலை, எப்போதும் சோர்வாக உணர்தல், களைப்பு, எதிலும் ஆர்வமற்ற உணர்வு, வயிறு கால்கள் அல்லது உடல் முழுவதும் கனமாக உணர்வது, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை கூட உடலில் அதிக அளவில் நச்சு இருப்பதற்கான அறிகுறிகள்.
உணவில் நிறைய மஞ்சள், சீரகம், கொத்துமல்லி போன்ற மூலிகை பொருட்களையும், ஏலக்காய், பெருஞ்சீரகம், வெந்தயம், இலவங்கப்பட்டை, இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். இந்த மசாலாக்கள் நமது செரிமானத்தைத் தூண்டி, உடல் சுத்திகரிப்பை தூண்டுகிறது. இதனால் உடல் சுத்தமாகிறது.
ஆமணக்கு எண்னெய் சிறிய அளவில் எடுத்துக் கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் சிறந்த பயனை தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
நச்சுகளை வெளியேற்ற, அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் நல்லது. அதேசமயம் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இஞ்சி டீ குடிப்பதால் உடலில் நச்சுகள் எளிதாக வெளியேறும். தினசரி காலையில் 3 லிட்டர் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி சுக்குப் பொடியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இந்த சுக்கு நீரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 1 கப் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
உடலின் செரிமான சக்தி பலவீனமாக இருப்பது மற்றும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதே நோய்கள் உருவாதற்கான காரணம் . செரிமானகோளாறும், உடல் பலவீனமும் உடலில் அதிகப்படியான நச்சுக்களை உருவாக்குகிறது. இந்த நச்சுக்கள் உடல் செயல்பாடுகளைத் பாதிக்கின்றன. அதோடு ஊட்டச்சத்து குறைபாடும் சேர்ந்தால் நோய்கள் ஏற்படும்.
அதே போன்று காய்கறிகள் மற்றும் பருப்பை சூப்பாக செய்து குடிக்க வந்தாலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR