எச்சரிக்கை! நீர்சத்து குறைபாட்டினால் கொலஸ்டிரால் அதிகரிக்கும்!

குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக  பலர்  நினைக்கிறார்கள். ஆனால், வெயில் காலத்தில் நீரிழப்பு காரணமாக நரம்புகளில் சேர்ந்துள்ள கொழுப்பு கடினமாகி, மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 28, 2023, 04:24 PM IST
  • தண்ணீரின் பற்றாக்குறையால், இரத்தமும் கெட்டியாகி, அதில் உள்ள கொழுப்பு விரைவாக நரம்புகளை அடைக்கிறது.
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.
  • கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதற்கான அறிகுறிகள்.
எச்சரிக்கை! நீர்சத்து குறைபாட்டினால் கொலஸ்டிரால் அதிகரிக்கும்!  title=

நல்ல இதய ஆரோக்கியம் தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், இளையவர்கள் பலர் மாரடைப்பாஇனால் இறக்கும் செய்திகளை தினமும் கேட்கிறோம்.  வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகளால் இதய ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஆரோக்கியமான செல்களை உருவாக்க நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அது இதய நோய்க்கான அபாயத்தை, குறிப்பாக மாரடைப்பு அதிகரிக்க செய்கிறது.

இந்நிலையில், நீரிழப்பு அதாவது Dehydration, LDL, அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் அதிகப்படியான வியர்வை நீர் இழப்புக்கு வழிவகுக்கும், மேலும் இது போதுமான நீர் உட்கொள்ளல் மூலம் ஈடுசெய்யப்படாவிட்டால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீண்ட கால நீரிழப்பு கல்லீரல், மூட்டு ஆரோக்கியம் மற்றும் தசை சேதத்திற்கு பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

நீண்ட காலமாக நீரிழப்பு இரத்தக் கொழுப்பை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில்  நீரிழப்பு ஏற்படுவதால், மொத்த கொழுப்பு, HDL மற்றும் LDL கொழுப்பு, அபோலிபோபுரோட்டீன் A-1 மற்றும் அபோலிபோபுரோட்டீன் B உட்பட கொழுப்பு அளவுகளை அதிகரிப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

கீழ்கண்ட  5 விஷயங்கள் நரம்புகளில் கொழுப்பை அதிகரித்து, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்

தண்ணீர் பற்றாக்குறையால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது

உடலில் தண்ணீர் இல்லாததால், மொத்த கொலஸ்ட்ரால், எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு அதிகரிக்கும். ஏனென்றால், கல்லீரல் அதிக கொலஸ்ட்ராலை இரத்தத்தில் வெளியிடுகிறது மற்றும் இரத்தத்தில் இருந்து கொழுப்பை அகற்றும் உடலின் திறனை பாதிக்கிறது. தண்ணீரின் பற்றாக்குறையால், இரத்தமும் கெட்டியாகி, அதில் உள்ள கொழுப்பு விரைவாக நரம்புகளை அடைக்கிறது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க தண்ணீர் உதவுகிறது. ஒரு ஆய்வில், தண்ணீரை அதிகமாக உட்கொள்ளும் நபர்களுக்கு மொத்த கொழுப்பு மற்றும் எல்டிஎல் கொழுப்பு அளவு குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது. நீரேற்றத்திற்கும் லிப்பிட் புரொபைல் அளவிற்கு இடையே ஒரு திட்டவட்டமான தொடர்பு உள்ளது.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி அவசியம் மற்றும் நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், எடையைக் குறைப்பதும் முக்கியம்.

உடலில் நீர் பற்றாக்குறையை எவ்வாறு அகற்றுவது

நாள் முழுவதும் அதிகபட்ச திரவ உணவை எடுத்துக் கொள்ளுங்கள். காஃபின் மற்றும் ஆல்கஹாலை நிறுத்துங்கள், ஏனெனில் அவை உடலில் நீர் சத்து பற்றாக்குறைக்கு காரணமாகின்றன. மேலும் மேலும் ஜூசி பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சூப் குடிக்கவும்.

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதற்கான அறிகுறிகள்

நெஞ்சு வலி

 உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது நெஞ்சு வலி ஏற்படும். சில நேரங்களில் இந்த மார்பு வலி மாரடைப்பின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. இது தவிர, நீங்கள் அடிக்கடி கால்களில் வலியை உணரலாம்.

உடல் பருமன்

உடல் பருமன் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாகும். உடல் எடை அதிகரிக்கும் போது, ​​கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயமும் அதிகமாகும். எனவே, நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், மார்பில் தொடர்ந்து வலி இருந்தால்,  உங்கள் கொலஸ்ட்ரால் அளவை உடனே சோதனை செய்யவும்.

அதிக வியர்த்தல்

அதிக வியர்வை அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். இதனுடன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போதும் அதிக வியர்வை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News