கேரளாவில், திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகையில் உள்ள தனியார் ஹோட்டலில் மயோனைஸ் சாப்பிட்ட ஏராளமானோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், அளவிற்கு அதிகமாக மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ளலாம்.
பர்கர், சாண்ட்விச் போன்ற உணவுகளுடன் சேர்த்து மயோனைஸை சாப்பிடும் வழக்கம் உள்ளது. பெரும்பாலான மக்கள் மயோனைஸை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த வெள்ளை க்ரீம் சட்னி அல்லது சாஸ் வகையை சேர்ந்த மயோனைஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது பலருக்கு தெரிவதில்லை.
மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
இரத்த சர்க்கரை அளவு
ஒவ்வொரு தேக்கரண்டி மயோனைஸிலும் சுமார் 1 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, அளவோடு சாப்பிட்டால் பாதிப்பு இருக்கும். ஆனால், அதிக அளவில் சர்க்கரையை வழக்கமாக உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், மயோனைஸை எப்போதாவது மற்றும் குறைந்த அளவுகளில் மட்டுமே உட்கொள்ளுங்கள். அதிலும் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டவர்கள் மயோனைஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இரத்த அழுத்த அளவு
மயோனைஸில் அதிக அளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே, மயோனைஸை அதிக அளவில் உட்கொண்டால், உங்கள் இரத்த அழுத்த அளவும் அதிகரிக்கலாம். மயோனைஸில் கூடுதல் எண்ணெய்கள் உள்ளன, ஆனால் அது நமக்கு தெரிவதில்லை. எனவே, உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால் தவிர்ப்பது நல்லது. இரத்த அழுத்தம் அதிகமானால், இரத்த உறைவு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | 60+ வயதிலும் பிட் ஆக இருக்க... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை..!!
உடல் பருமன்
உடல் பருமனாக இருப்பவர்கள் மயோனைஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் நிறைய கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால், இதனை தொடர்ந்து உட்கொள்வதால் உங்கள் எடையை அதிகரிக்கலாம். நமயோனைஸ் மாயோ பெரும்பாலும் எண்ணெயில் தயாரிக்கப்படுகிறது, இதில் அதிக கொழுப்பு உள்ளது. ஒரு தேக்கரண்டி மயோனைஸ் 100 கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் அதை சாப்பிட்டாலும், அதை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ளுங்கள்.
இதய நோய்
அலவிற்கு அதிகமாக மயோனைஸ் உட்கொள்வதால் இதய நோய்களும் ஏற்படும். அதிலும் தினமும் துரித உணவுகளுடன் மயோனைஸ் சாப்பிட்டால், அது உங்கள் இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். ஒரு தேக்கரண்டி மயோனைசேயில் சுமார் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. அதிக நிறைவுற்ற கொழுப்பு உணவை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது. எனவே இனிமேல், நீங்கள் சாண்ட்விச் அல்லது பர்கரில் மயோனைஸை சேர்க்கும்போதெல்லாம், அதன் அளவை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
உடல் பலவீனம்
அளவிற்கு அதிகமாக மயோனைஸ் சாப்பிடுவதால் தலைவலி, பலவீனம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏனெனில், சந்தையில் கிடைக்கும் மயோனைஸில் அதிக அளவில் ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் செயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பல விதமான பக்க விளைவுகள் ஏற்படலாம். மேலும் மயோனைஸ் பேக்கை திறந்த சில நாட்களுக்குள் அதனை பயன்படுத்தி விட வேண்டும். இல்லை என்றால், ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மேலும் படிக்க | அதிக கலோரிகளை எரிக்கும் ‘பவர் வாக்கிங்’... 5 நிமிட நடைபயிற்சியே போதும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ