சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் (Corona Virus), கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பின், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’(Covishield), பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்ஸின்’(Covaxin) ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) காலை 10.30 மணிக்கு துவக்கி வைத்தார்.
இந்தியாவில் (India) வெறும் 19 நாட்களில் சுமார் 45 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 18 நாட்களுக்குள் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் மருத்து செலுத்தும் பணி வரும் 13ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியில், நாடு முழுவதும் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், பிற நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
ALSO READ | உலகளவில் தடுப்பூசி பணியில் முதலிடத்தில் இந்தியா; 19 நாட்களில் 45 லட்சம் தடுப்பூசி ..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR