புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,830 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 31, 2021) தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் செயலில் உள்ள கொரோனா வைரஸ் கேசலோட் 1,59,272 ஆகக் குறைந்துள்ளது, இது 247 நாட்களில் மிகக் குறைவு. 24 மணி நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,283 என்ற அளவில் குறைவாக பதிவாகியது.
இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பில், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1% க்கும் குறைவாக, தற்போது 0.46% ஆக உள்ளது என்று கூறியுள்ள சுகாதார அமைச்சகம், 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு இது மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,667 பேர் குணமடைந்துள்ளனர்; 446 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை 3.42 கோடி நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதில் 3.36 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4.58 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, இந்தியா 60.83 கோடி கொரோனா தொற்று பரிசோதனைகளை நடத்தியுள்ளது. பரிசோதனை செய்தவர்களில் தொற்று பாதிப்பு உறுதியானவர்களின் வாராந்திர நேர்மறை விகிதம் தற்போது 1.18 சதவீதமாக உள்ளது.
ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!
இதற்கிடையில், நாடு முழுவதும் இதுவரை 106.14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 13 கோடிக்கு அதிகமான அளவில், தடுப்பூசி டோஸ்கள் இன்னும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று, ஜி-20 உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி, 2022 ஆம் ஆண்டில் 500 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க இந்தியா தயாராகி வருவதாகக் கூறினார். 'உலகளாவிய பொருளாதாரம் மற்றும் உலகளாவிய ஆரோக்கியம்' என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். சர்வதேச பயணத்தை எளிதாக்கும் பிரச்சினை தொடர்பாகவும், இதற்கான வழிமுறையாக தடுப்பூசி சான்றிதழின் பரஸ்பர அங்கீகாரத்தின் வழிமுறை பற்றியும் பேசப்பட்டது.
Today’s proceedings at the @g20org were extensive and productive. I took part in the various sessions, participated in bilateral meetings and also met several leaders on the sidelines of the summit deliberations. It is important nations work together to further global good. pic.twitter.com/Ww2bkEjpyR
— Narendra Modi (@narendramodi) October 30, 2021
கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட, நாம் அனைவரும் 'ஒரே பூமி - ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையை முன்வைத்துள்ளோம் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த நெருக்கடியையும் சமாளிக்க, இந்த தொலைநோக்குப் பார்வை உலகில் மிகப்பெரிய சக்தியாக மாறும் என்றும் பிரதமர் கூறினார்.
ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR