நாட்டில் கொரோனா வைரஸ் ( Corona Virus) பரவல் நாளுக்கு நாள் தீவரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக 59,118 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபருக்குப் பிறகு அதிக அளவிலான பாதிப்பு உண்டாகியுள்ளது. இப்போது நாட்டில் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 1,18,46,652 என்ற அளவை எட்டியுள்ளது.
ஹோலிக்கு சற்று முன்பு, கொரோனா (Corona) தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகம் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் குஜராத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் நிலைமையும் கவலை அளிக்கிறது.
ALSO READ | ஒரு நாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்.. கோடையில் முட்டை சாப்பிடலாமா..!!!
மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் தான் அதிக அளவில் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ள மாநிலங்கள் ஆகும். நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், COVID-19 காரணமாக 257 பேரும் இறந்துள்ளனர். இதன் காரணமாக, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,949 ஐ எட்டியுள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் 4,21,066 ஆக அதிகரித்துள்ளன. ஒரே நாளில் 32,987 குணமடைந்துள்ளனர். இதை அடுத்து, நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,64,637 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் சமூக இடைவெளியை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், மாஸ்குகளை முறையாக அணிய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ALSO READ | சாக்லேட் பாய் மாதவனையும் விடாத கொரோனா; மாதவனின் Virus ட்வீட்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR