நீரிழிவு நோயாளியா நீங்கள்? இதோ...இந்த மேஜிக் பானம் சுகரை கட்டுப்படுத்தும்

Amla Juice for Diabetes: நெல்லிக்காய் மற்றும் அதன் சாறு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கும் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2023, 11:07 PM IST
  • நெல்லிக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பானமாகும்.
  • இது பல வழிகளில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • நெல்லிக்காயில் பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன.
நீரிழிவு நோயாளியா நீங்கள்? இதோ...இந்த மேஜிக் பானம் சுகரை கட்டுப்படுத்தும் title=

நீரிழிவு நோய்க்கு நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு சரியான உணவை உட்கொள்வது மிக அவசியமாகும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு அற்புதமான பானம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள பானமாகும். இது பல வழிகளில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காயில் பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் பல உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த ஒரு சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு நெல்லிக்காய் சாறு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கு இருக்கும் சந்தேகமாக உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நெல்லிக்காய் சாறு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்? 

நெல்லிக்காய் மற்றும் அதன் சாறு டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கும் சாதாரண இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்

மருத்துவ குணங்கள் நிறைந்தது: 

இதில் வைட்டமின் சி, ஈ, பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடெண்டுகள்  நிறைந்துள்ளன. இதன் காரணமாக இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, மற்றும் அதன் சேதத்தைத் தடுக்கிறது. இது சேதமடைந்தால், அது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.

மேலும் | மூன்றே மாதங்களில் தொப்பை தொலைந்துவிடும்: இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது: 

நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது, இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவும்: 

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், இன்சுலின் உணர்திறனை பாதிக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் முடியும்.

ட்ரைகிளிசரைடைக் குறைக்க உதவும்: 

நீரிழிவு நோயாளிகளில் ட்ரைகிளிசரைடின் அதிக அளவு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் பருமனின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் நெல்லிக்காய் சாறு உட்கொள்வது ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவது எப்படி?

2-3 நெல்லிக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். நெல்லிக்காயை வெட்டி அதன் விதைகளை அகற்றவும். அதன் பிறகு ஒரு பிளெண்டரில் போட்டு மிருதுவான பேஸ்ட் செய்து கொள்ளவும். அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலக்கவும். உங்கள் நெல்லிக்காய் சாறு தயாராகிவிட்டது. நீங்கள் விரும்பினால், சாற்றை வடிகட்டியும் உட்கொள்ளலாம். ஆனால் நெல்லிக்காய் சாற்றை கூழுடன் சேர்த்து உட்கொள்வது அதிக நன்மைகளைத் தரும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஆகையால் இதனை வடிகட்டாமல் உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் கட்டுப்பாட்டிற்கு பெரிதும் உதவும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். எனினும், அதை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சம்மரிலும் சைனஸ் பிரச்னையா... உடனடி நிவாரணத்திற்கு இதனை செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News