உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உப்பில்லாத உணவை சாப்பிட முடியாது என்பதே இதன் பொருள். ஆனால், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் விஷம். உணவுப் பொருட்களில் உப்பை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதே பல ஆபத்தான நோய்களுக்கு மூலக் காரணமாகி வருகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். உணவில் அதிக உப்பை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அகால மரணமடைகிறார்கள் என்ற தகவல், நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால், அது தான் உண்மை.
உப்பை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது இதய செயலிழப்பு முதல் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. மேலும், உடல் பருமன், உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உப்பில் உள்ளசோடியம் மற்றும் ஃப்ளோரைடு என்ற இரண்டு அத்தியாவசிய தாதுக்கள் நம் உடலுக்குத் தேவை என்றாலும், அது அளவிற்கு அதிகமானால், பல நோய்களின் அபாயத்தை (Health Alert) அதிகரிக்கிறது.
அதிக உப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்
எடிமா என்னும் வீக்கம்
அதிக உப்பு சாப்பிடுவது உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. நம் உடலில் சேரும் கூடுதல் சோடியம் உடலில் நீரின் அளவை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வீக்கம் என்னும் எடிமா பிரச்சனை தொடங்குகிறது. எடிமா காரணமாக, கால்களில் வீக்கம் ஏற்படும்.
இதய ஆரோக்கியம்
உடலில் நீர் அதிகமாவதால், ரத்தத்தில் அளவு அதிகரித்து, இது ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது. எனவே, அதிக உப்பு சாப்பிடுவது இதயம் தொடர்பான தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால், மாரடைப்பு மற்றும் பக்கவாதமும் ஏற்படலாம்.
மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்
சிறுநீரக ஆரோக்கியம்
இரத்த அழுத்தம் அதிகரிப்பதால், சிறுநீரகங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது சிறுநீரகம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக உப்பை உட்கொள்வது சிறுநீரக கற்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதிகப்படியான உப்பு சிறுநீரில் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது மற்றும் யூரிக் அமிலத்துடன் கலக்கும் போது, அது படிகங்களாக மாறி, அவை சிறுநீரக கற்களாக உருவாகும்
கால்சியம் குறைபாடு
அளவிற்கு அதிக உப்பு ந்லும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி விடும். அதிக உப்பு சாப்பிடும்போது, அதிக தண்ணீர் குடிக்க நேரிடும். அளவிற்கு அதிக தண்ணீர் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். அதன் மூலம் கால்ஷியம் உள்ளிட்ட அத்தியாவசிய கனிம சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறும். இதனால், எலும்புகள் பலவீனமடைகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது.எலும்புகளை வலுப்படுத்தவும் கால்சியம் தேவைப்படுகிறது. அதோடு, கால்சியம் உங்கள் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான கனிமமாகும்.
அறிவாற்றல் பாதிப்பு
நீண்ட காலத்திற்கு, அளவிற்கு அதிக உப்பு சாப்பிட்டு வருவதால், நினைவாற்றல் இழப்பு, அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது தவிர உப்பை அதிகமாக உட்கொள்வதால் முடி உதிர்தல், மற்றும் கோபம், மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, உணவில் உப்பை குறைந்தபட்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நபர் தினமும் 3 கிராமுக்கு குறைவான அளவு உப்பை உட்கொள்ள வேண்டும் என WHO அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ