இனி தேங்காய் மட்டைய தூக்கி போடாதீங்க, அதுல இவ்ளோ சத்து இருக்கு

பெரும்பாலான மக்கள் தேங்காய் மட்டைகளை குப்பையில் வீசிவிடுவார்கள். ஆனால் அதன் பலன்களை அறிந்த பிறகு, அதை தூக்கி எறிவதற்கு முன் கண்டிப்பாக யோசிப்பீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 24, 2022, 04:42 PM IST
  • பெரும்பாலான மக்கள் தேங்காய் மட்டைகளை குப்பையில் வீசுவிடுவார்கள்.
  • தேங்காய் மட்டையின் அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
  • உங்களின் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
இனி தேங்காய் மட்டைய தூக்கி போடாதீங்க, அதுல இவ்ளோ சத்து இருக்கு title=

தேங்காய் மட்டையின் பயன்கள்: தேங்காயில் பல நன்மைகள் உள்ளன. அதன் தினசரி நுகர்வு முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தேங்காயின் அற்புத ஆரோக்கிய பண்புகள் பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்துதிருக்கும். ஆனால் தேங்காய் மட்டையின் பண்புகள் சிலருக்கு மட்டுமே தெரியிருக்கும். தேங்காயை சாப்பிட்ட பிறகு, மக்கள் அதன் மட்டையை தூக்கி எறிந்துவிடுவதை நாம் அடிக்கடி காணலாம். அதன்படி இனி நீங்கள் தேங்காய் மட்டையை தூக்கி எறிய வேண்டாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். எனவே தேங்காய் மட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

காயம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது
காயங்களுக்கு அடிக்கடி தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக காயம் ஏற்படும் போது வீங்கிய இடத்தில் தேங்காய் எண்ணெயையும் நாம் தடவுவோம். ஆனால் தேங்காய் மட்டையால் காயத்தின் வீக்கத்தையும் நீக்கலாம். தேங்காய் மட்டையை அரைத்து மஞ்சளுடன் கலந்து எரியும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும். 

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

பற்கள் மஞ்சள் நிறமாதல் பிரச்சனை
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் பிரச்சனை மக்களிடையே பொதுவானது. தேங்காய் மட்டையைப் பயன்படுத்தி பற்களின் மஞ்சள் நிறத்தையும் நீக்கலாம். இதற்கு தேங்காய் முடியை எரித்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சோடா கலந்து பல்லில் லேசாக மசாஜ் செய்யவும். சில நாட்களில் அதன் விளைவை நீங்கள் காண்பீர்கள்.

முடியை கருமையாக்கும்
தேங்காய் மட்டை வெள்ளை முடியை கருமையாக்கவும் பயன்படுகிறது. இதற்கு நீங்கள் தேங்காய் மட்டையை கடாயில் சூடாக்கி அரைக்கவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசவும், இதனால் முடி கருமையாக மாறும்.

தேங்காய் மட்டை மூலங்களை நீக்குகிறது
பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட தேங்காய் மட்டையை பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் மட்டையை அரைக்கவும். இந்த பொடியை தினமும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பிரச்சனை குணமாகும். 

எனவே தேங்காய் மட்டையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News