சியா விதைகளின் நன்மைகள் தெரிஞ்ச உங்களுக்கு பக்க விளைவுகள் தெரியுமா? இந்த பிரச்சனை வரும்

சியா விதைகளை அதிகம் சாப்பிடும்போது செரிமான பிரச்சனை முதல் ஒவ்வாமை வரை பல பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நல்லவைகளை தெரிந்து வைத்திருக்கும் அதேசமயத்தில் பக்க விளைவுகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 12, 2023, 10:15 AM IST
  • சியா விதைகள் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பு
  • செரிமான பிரச்சனை முதல் தோல் வியாதிகள் வரை
  • மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்
சியா விதைகளின் நன்மைகள் தெரிஞ்ச உங்களுக்கு பக்க விளைவுகள் தெரியுமா? இந்த பிரச்சனை வரும் title=

சியா விதைகளின் பக்க விளைவுகள் 

சியா விதைகளின் பயன்களை ஆய்வுகள் மூலம் தெரியப்படுத்தி இருந்தாலும், இன்னும் போதிய அளவிலான சான்றுகளும் ஆய்வுகளும் நடத்தப்பட வேண்டும். அதிக அளவிலான சியா விதைகளை உட்கொள்ளும்பொழுது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சில ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியிருக்கும் நிலையில், இதுவரை கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம். 

செரிமான பிரச்சனை 

சியா விதைகள் அதிக நார் சத்துக்களை கொண்டுள்ளது. எனவே கூறப்படும் அளவில் சியா விதைகளை எடுத்துக் கொண்டால் உடலில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது வேறு சில செரிமான கோளாறுகளான வீக்கம், வாயு, மலச்சிக்கல், வாந்தி போன்ற பிரச்சனைகள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தினசரி நார் சத்துக்களை உட்கொண்ட பின்னர் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

மேலும் படிக்க | வேப்பிலையை இப்படி உட்கொண்டால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்!

மூச்சுக் குழாயில் அடைப்பு 

சியா விதைகள் தன்னுடைய அளவை விட 10 - 12 தடவை அதிக நீரை தன்னுள் உறிஞ்சி வைத்துக் கொள்ள முடியும். எனவே சியா விதைகளை உண்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். 39 வயது ஆண் மேல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சியா விதைகளை உண்ட பிறகு தண்ணீர் குடித்ததால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். எனவே ஊறவைத்த சியா விதைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதே சிறந்ததாகும் அல்லது சியா விதைகளை உண்ட பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது.

புற்று நோய்க்கு வழிவகுக்கும்

சியா விதைகளின் மிக முக்கிய கூறு ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் தான். ஆய்வு ஒன்றில், முன்பே இரத்தத்தில் அதிக அளவிலான  ஒமேகா - 3 கொழுப்புக்கு அமிலம் உள்ளவர்கள் சியா விதைகளை உட்கொண்ட பொழுது அது புற்று நோய்க்கு வழி வகுக்கிறது என்று கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்

மற்ற  உணவு பொருட்களைப் போல சியா விதைகளும் ஒரு சில மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவற்றுள் சில -  வாந்தி, அரிப்பு, வயிற்றுப் போக்கு, சுவாசத்தில் சிரமம் போன்றவை ஆகும்.

வேறு மருந்துகளோடு எதிர் விளைவுறுத்தும்

உயர் இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் இருக்கும் உயர் சர்க்கரை அளவையும் குறைக்கும் தன்மை கொண்டது சியா விதைகள். எனவே, நீரிழிவு மாத்திரை மற்றும் இரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் அதோடு சியா விதைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சியா விதைகள் பயன்பாடு

சியா விதைகள் சத்து நிறைந்த உணவாகும் என்பதால் சியா விதைகளை சூப்பர்ஃபூட்ஸ் அல்லது செயல்பாட்டு உணவுகள் என்றும் அழைக்கின்றனர். ஆல்பா-லினோலெனிக் அமிலங்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக சியா விதைகளில் இருப்பதால் உடலின் ஆரோக்கியத்தை பேணிக் காத்திட உதவுகிறது. 

சியா விதைகளை முழு விதைகளாகவும், பொடியாகவும், எண்ணெய்யாகவும் பயன்படுத்தலாம் என்பதால்  சியா விதைகள் ஒரு சிறந்த உணவு விருப்பம் ஆகிறது. பேக்கரி பொருட்களிலும், சாலட்களில் தூவுவதற்கும் மற்றும் புட்டிங் செய்யும்பொழுது சியா விதைகளை உபயோகிக்கின்றனர். இருப்பினும், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளப்படும் சியா விதைகளால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும். 

மேலும் படிக்க | சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என சும்மாவாகவா சொன்னார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News