சுகர் உங்களை பாடாய் படுத்துகிறதா? காலையில் இந்த செடியின் 2 இலைகளை சாப்பிடுங்கள்

Home Remedies For Diabetes: நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அந்த மருந்துவம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2023, 09:53 AM IST
  • உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • சர்க்கரை அளவை வாழ்நாள் முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும்.
சுகர் உங்களை பாடாய் படுத்துகிறதா? காலையில் இந்த செடியின் 2 இலைகளை சாப்பிடுங்கள் title=

நீரிழிவு நோய்க்கான வீட்டு வைத்தியம்: இந்தியாவில் பல வகையான மூலிகைகள் காணப்படுகின்றன. ஆயுர்வேதத்தில், அவை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இதனிடையே உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகும். இதில் சர்க்கரை அளவை வாழ்நாள் முழுவதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே சில மூலிகைகள் நீரிழிவு சிகிச்சையில் உதவியாக இருக்கும். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இன்சுலின் இலைகள்
இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இன்சுலின் இலை உட்கொள்வதன் மூலம், சில நிமிடங்களில் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். இந்த தாவரத்தில் உள்ள இயற்கை ரசாயனம் சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றுகிறது. சர்க்கரை நோய் மட்டுமின்றி, இது இருமல், கண் தொற்று, சளி, ஆஸ்துமா, கருப்பைச் சுருக்கம், தோல் தொற்று, வயிற்றுப்போக்கு, நுரையீரல் நோய்கள், மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கலாம்.

மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

இப்படித்தான் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இயற்கையான வழிகளில் ஒன்று இன்யூலின் இலைகளை மென்று சாப்பிடுவது. இன்சுலின் செடி ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமானதாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த செடியில் அதிக அளவு கோர்சாலிக் அமிலம் மற்றும் நீர் உள்ளது. நீரில் கரையக்கூடிய உள்ளடக்கம் காரணமாக, இரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது. இதன் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் புரதங்கள், டானின்கள், சபோனின்கள், ஸ்டீராய்டு ஃபிளாவனாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்பு, பி கரோட்டின் சத்துக்கள், ஆல்கலாய்டுகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை இன்சுலின் செடியில் காணப்படுகின்றன.

இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘இன்சுலின்’ செடி! பயன்படுத்தும் முறை!

இன்சுலின் செடியின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

- இன்சுலின் செடியின் 2 இலைகளை மென்று சாப்பிடுவது வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்துகிறது.
- இந்த செடியின் காணப்படும் இயற்கை இரசாயனமானது உடலின் சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
- இது சர்க்கரைக்கு மட்டுமல்ல, இருமல், கண் தொற்று, சளி, ஆஸ்துமா, கருப்பைச் சுருக்கம், தோல் தொற்று, வயிற்றுப்போக்கு, நுரையீரல் நோய்கள், மலச்சிக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

இன்சுலின் செடியின் இலைகளை இப்படி பயன்படுத்தவும்
நீங்கள் இன்சுலின் செடியை பல வழிகளில் உட்கொள்ளலாம். இதற்கு செடியின் இலைகளை அரைத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கலாம். இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. அதேபோல் வேகவைத்த இலைகளை சாப்பிடுவதும் நன்மை பயக்கும். இதற்கு சில இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, வடிகட்டிக் குடிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சிறுநீரகத்தை பாழாக்கும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க மக்களே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News