Polycystic Ovary Syndrome என்பதைத்தான் நாம் இப்போது PCOS என குறிப்பிடுகிறோம். ஹார்மோன் குறைபாடாக பார்க்கப்படும் இந்த பிரச்சச்னை, மகளிருக்கு குழந்தையின்மையை உண்டாக்குமோ என்ற அச்சம் இருந்து வருகிறது. வாழ்வியல் மாற்றங்கள், உடல் எடை அதிகரிப்பு, மரபியல் தொடர்பு என இது உருவாக பல்வேறு காரனங்களை கூறுகின்றனர் மருத்துவர்கள். இந்த பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு அதிக அளவிலான அண்ட்ரோஜென்ஸ் என்ற ஹார்மோன் இருக்குமாம். இதை male hormones என்று குறிப்பிடுகின்றனர். இது இருந்தால், கருப்பையில் இருக்கும் முட்டைகள் வெளியேறாமல் மாதவிடாய் பிரச்சனை ஏற்படும். இதனால், குழந்தை பிறப்பதிலும் பிரச்சனை உண்டாகலாம்.
பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் கர்ப்பமாக முடியுமா?
பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும் பெண்கள் கர்ப்பமாக முடியுமா முடியாதா என்ற குழப்பமும் கேள்விகளூம் பல ஆண்டுகளாக இருக்கிறது. இது குறித்து பேசும் மருத்துவர்கள், பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களும் கண்டிப்பாக கர்ப்பம் தரிப்பர் என்று கூறுகின்றனர். இந்த பிரச்சனையால், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் 10 முதல் 20 சதவிகித பெண்கள் பாதிப்படைவதாக கூறப்படுகிறது. பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும் பெண்கள் கர்ப்பமாவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்தாலும், இதற்கு தாமதமும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்வியல் முறைகள் மற்றும் சரியான மருத்துவ முறைகளினால் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிசிஓஎஸ் இருக்கும் பெண்கள் மகப்பேறு மருத்துவருடன் சேர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொண்டு, கருவுறுதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | PCOS என்றால் என்ன? எளிய வழிகளில் இதை கட்டுப்படுத்துவது எப்படி?
கர்ப்பம் தரிக்க நினைக்கும் பிசிஓஎஸ் பாதிப்பால் அவதிப்படுவோர் செய்ய வேண்டியது என்ன?
>ஆரோக்கியமான டயட்டை கடைப்பிடிக்க வேண்டும். தினமும் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பயிர்கள் இருக்கும் உணவுகள் இருக்க வேண்டும்.
>ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிகப்பு இறைச்சிகளை உட்கொள்ள கூடாது என கூறுகின்றனர், மருத்துவர்கள்.
>ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் இருக்கும் உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். விதைகள், வால்நட்ஸ், மீன் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
>பதப்படுத்தப்பட்ட மைதா, அரிசி சாப்பாடு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகள் ஆகியவற்றை அதிகாளவில் எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
>நிறைய தண்ணீர் குடித்து, உடலில் ஃபபர் சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
>தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
>மன பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
>வாக்கிங், நீச்சல் பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். இது, உங்கள் ஹார்மோன் பாலன்ஸை அதிகரிக்க உதவுமாம். வாரத்தில் 5 நாட்களில், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
>உடல் எடை அதிகமாக கொண்டிருப்பவராக இருந்தால், உடலில் 10 சதவிகித எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
>இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவை கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும்.
>அண்டவிடுப்பு நாட்கள் வருவதற்கு முன்னர் (Ovulation Period) உடலுறவு கொள்ள வேண்டும்.
>மாதா மாதம், உங்கள் மாதவிடாயை சரியாக கணக்கிட்டு கொண்டு, எந்த நேரத்தில் விட்டுப்போகிறது என்பதையும் எத்தனை நாட்கள் உதிரம் தள்ளி வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | PCOS: மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் 5 ‘அற்புத’ மூலிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ