நீரிழிவு நோயாளிகள் மது அருந்தலாமா?

ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு யூனிட்டுக்கு மேல் அல்லது பெண்கள் ஒரு யூனிட்டுக்கு மேல் மது அருந்த கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 23, 2022, 06:04 AM IST
  • பரம்பரையாக நீரழிவு நோய் உடலுக்கு வருகிறது.
  • மது அருந்துவதால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது.
  • ரத்த சர்க்கரை அளவை மது அதிகப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் மது அருந்தலாமா? title=

டைப் 2 நீரிழிவு நோய்க்கு மது அருந்துவது மட்டும் தான் காரணமா என்றால் இல்லை, அதற்கு பாரம்பரிய ஜீன்கள், உடல் பருமன், முதுமை, உடல் செயல்பாடு குறைவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. போன்றவையும் இதற்கு காரணமாகும்.  மிதமான அளவு ஆல்கஹால் (எ.கா. பெண்களுக்கு <30 மில்லி/நாள் விஸ்கி, ஆண்களுக்கு <60 மில்லி/நாள்) நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்காது.  அதேசமயம்  அதிகளவில் ஆல்கஹால் குடிப்பது நீரிழிவு நோயை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.  மது அருந்துவதால் உடல் எடையும் அதிகரிக்கும் மற்றும் கணைய அழற்சி ஏற்பட்டு உங்கள் பேராபத்துக்களை விளைவிக்கலாம். பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் மதுவைத் தவிர்ப்பது மிகவும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதினால் ஒருவரது நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது, உணவு மற்றும் வாழ்க்கை முறையில் பலவித சிக்கல்களும் ஏற்படுகிறது.  

ஆல்கஹாலை விஷம் என்றுகூட சொல்லலாம், மது அருந்துவதால் சாலையில் வாகன விபத்துக்கள், வன்முறையில் ஈடுபடுதல் மற்றும் பிற விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.  அதிகப்படியான குடிப்பழக்கம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இதயம், கல்லீரல், கணையம் மற்றும் சில புற்றுநோய்களின் ஆபத்தை அதிகரிக்கும்.  நீரிழிவு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் குறிப்பாக இன்சுலின் மற்றும் சல்போனிலூரியாஸ் எடுத்து கொள்பவர்கள் மது அருந்தினால் அவர்களுக்கு குறைந்த இரத்த குளுக்கோஸ் அளவுகளுக்கு (<70mg/dl) வழிவகுக்கும், இது பாதிப்பு அவர்களுக்கு மது அருந்திய அடுத்த 24 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

இரவு உணவுடன் மது அருந்துபவர்கள் தூங்குவதற்கு முன் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.  பரிசோதிக்கும்போது ரத்த சர்க்கரை 100 mg/dl க்கும் குறைவாக இருந்தால், ஒரு பழம், பால் அல்லது அரை சாண்ட்விச் சாப்பிடலாம்.  விஸ்கி அல்லது ரம்மை விட ஓட்கா அல்லது ஜின் பாதுகாப்பானது என்று கூறுவது தவறானது, மேலும்  இனிப்பு ஒயின்களைத் தவிர்ப்பது நல்லது.  ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு யூனிட்டுக்கு மேல் அல்லது பெண்கள் ஒரு யூனிட்டுக்கு மேல் மது அருந்த கூடாது.  உயர் ரத்த அழுத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண், நரம்பு அல்லது கணைய நோய் போன்றவை  இருந்தால் மதுவை கண்டிப்பாக தவிர்க்கவும்.  வெறும் வயிற்றில் மது அருந்தக்கூடாது, நீரழிவு மற்றும் ஹேங்ஓவரை தடுக்க மதுவுடன் நிறைய தண்ணீர் குடிக்கவும்.  மது அருந்தும்போது சைட் டிஷ்க்கு குறைந்த கலோரி உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.  சர்க்கரை கலந்த பானங்கள் அதாவது இனிப்பு ஒயின்கள் அல்லது கார்டியல்களைத் தவிர்க்கவும்.  மது அருந்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இரத்த குளுக்கோஸை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News