உடல் எடையை குறைக்க சில குறிப்புகள்: வீட்டிலேயே செய்யலாம்.

Last Updated : May 11, 2016, 11:52 AM IST
உடல் எடையை குறைக்க சில குறிப்புகள்: வீட்டிலேயே செய்யலாம். title=

அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வேகமாக நடக்கவும் முடியாது.

வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். அதைப்பற்றி பார்போம்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.

உருளைக்கிழங்கு அரிசிமாவு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும் அதற்கு பதிலாக கோதுமை மற்றும் கோதுமைமாவு பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் காலையில் தக்காளி மற்றும் கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
அதிக கலோரி அடங்கிய வெண்ணெய், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் இனிப்பு போன்ற பொருட்களை குறைக்கவும்.

வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம் இருக்கும் பழத்தை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் முடியும்.

Trending News