புது டில்லி: தற்போதைய கொரோனா சூழ்நிலையில், இன்று வெளியான நம்பிக்கைக்குரிய மற்றும் ஒரு நல்ல செய்தி இதைவிட வேற எதுவும் இருக்க முடியாது. நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 அன்று, அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, இந்திய விஞ்ஞானிகள் தங்கள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்படுகின்றன.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த ஏற்பாடுகள்:
பாரத் பயோடெக் (Bharat Biotech) உடனான பொதுவான திட்டத்தின் கீழ் புதிய கொரோனா தடுப்பூசி (New Corona Vaccine) தயாராக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர் - ICMR) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். செய்துக்கொண்டு. BBV152 COVID Vaccine என்ற பெயரில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி COVID-க்கு எதிராக செயலபடும். இதுதொடர்பாக, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எய்ம்ஸ் உட்பட நாட்டின் 13 மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளை (Clinical Trials) விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த தடுப்பூசியின் (Corona Vaccine) பரிசோதனையில் ஈடுபடும் மருத்துவர்களின் கருத்து இதிலிருந்து வேறுபட்டது. மனித சோதனைகள் தொடங்க குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஆகலாம் என்று அவர் கூறினார். வழக்கமாக சோதனை முடிவடைய 6 மாதங்கள் ஆகும். ஆனால் இந்த தடுப்பூசி எந்த வேகத்தில் இயங்குகிறது என்பதைப் பொறுத்து, இந்த தடுப்பூசியின் சோதனைகளை விரைவாகச் சமாளிக்க முடியும். ஆயினும்கூட, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசியைத் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கைகள் தொடர்கிறது. ஒருவேளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசி குறித்து கொள்கையளவில் ஒரு அறிவிப்பை வெளியிட முடியும் எனத் தெரிகிறது. ஆனால் தடுப்பூசி சந்தைக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். இந்த நேரம் குறைந்தது 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை ஆகலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி:
கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) தயாரிப்பதில் இந்தியா கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளது. இப்போது இது உலகின் முதல் கொரோனா தடுப்பூசி அல்லது இரண்டாவது என்று அழைக்கப்படும். இதற்கு சில மாதம் ஆகலாம். தற்போது, இந்த செய்தி கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பாரத் பயோடெக் நகம் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிற செய்தி | கொரோனா தடுப்பூசி சோதனையில் வெற்றியை நோக்கி செல்லும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றிபெற உலகில் நடந்து வரும் கொரோனா தடுப்பூசிக்கான காத்திருப்பு முடிவடையவில்லை. இந்த தடுப்பூசி தயாரிப்பதில் உலகின் சில நாடுகள் ஆரம்ப வெற்றியை அடைந்துள்ளன. அவற்றில் ஒரு நாடு இந்தியாவும் ஆகும். கொரோனா தடுப்பூசி - ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் (COVAXIN) அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, இப்போது அதன் மனித சோதனை ஜூலை முதல் தொடங்க உள்ளது.
இந்த தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவை பெருமைக்குரியவை என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.