தோல் நமது உடலின் மிகப்பெரிய உறுப்பு, அதை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும் போது, சரும பராமரிப்பும், அதை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதும் அவசியம் ஆகும்.
புற ஊதா கதிர்கள், தோலில் ஏற்படும் மாசுபாடு உட்பட பல காரணிகளால் தோல் நேரடியாக பாதிக்கப்படுகிறது.
இதனால் நோய்த்தொற்றுக்களும், பாக்டீரியாவின் தாக்குதல்களும் சருமத்தை சேதமடையச் செய்கிறது. சில தோல் நோய்கள் எல்லா வயதினருக்கும் மிகவும் பொதுவானவை. அவற்றிற்கான அறிகுறிகள் பொதுவாக ஒன்றுபோலவே இருக்கின்றன.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
விட்டிலிகோ (vitiligo)
விட்டிலிகோ என்பது ஒரு நாள்பட்ட தோல் நோயாகும், இது தோலில் உள்ள திட்டுகள் (வெள்ளை மற்றும் வெளிர்) மெலனின் இல்லாததால் ஏற்படுகிறது.
விட்டிலிகோவுக்கு இரண்டு வெவ்வேறு நிலைகள் உள்ளன, அதாவது - பிரிவு விட்டிலிகோ மற்றும் பிரிவு அல்லாத விட்டிலிகோ. எந்தவொரு தன்னியக்க நோயெதிர்ப்பு நோய்களாலும் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
எக்ஸிமா (Eczema)
இந்த நிலை அடோபிக் டெர்மடிடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோல், சிவந்துப் போவது, அரிப்பு, வீக்கம் அல்லது வறட்சி என பல அறிகுறிகள் ஏற்படும்.
ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தோல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், இந்த நிலையைத் தூண்டுவதில் மன அழுத்த அளவுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் வலிமை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சொரியாசிஸ் (Psoriasis)
சொரியாசிஸ் என்பது ஒரு நாள்பட்ட தோல் நிலை, இது உச்சந்தலை, முழங்கை முழங்கால்கள் போன்ற பகுதிகளின் தோல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
சருமம் வறண்டு போவது, தோல் முழுவதும் சிவப்பு மற்றும் செதில் திட்டுகள் ஏற்படுவது, தோலில் புண் ஏற்படுவது, தோலில் எரிச்சல் உணர்வுடன் வீக்கம். குட்டேட் சொரியாசிஸ், பிளேக் சொரியாசிஸ் மற்றும் சொரியாடிக் சொரியாசிஸ் என பல வகை சொரியாசிஸ் நோய்கள் உள்ளன.
படை நோய் (Hives)
படை நோய் என்பது மற்றொரு வகை நாள்பட்ட தோல் நோயாகும், இது தோலில் அரிப்புக்கு வழிவகுக்கும். இந்த நிலையின் பொதுவான அறிகுறிகளில் சில தோலில் சிவப்பு மற்றும் வெள்ளை திட்டுகள், அரிப்பு மற்றும் சிவத்தல் ஆகியவை அடங்கும்.
தோல் புண்களை ஏற்படுத்தும் இந்த நோய்க்கு காரணம், மன அழுத்தம், சூரியனின் வெப்பம், நச்சு கூறுகளால் சருமம் நேரடியாக பாதிக்கப்படுவது ஆகும்.
மேலும் படிக்க | வெள்ளைபடுதல் நோய்க்கு சிறந்த தீர்வு : இதை மட்டும் செய்தால்போதும்
ரோசாசியா
நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மற்றொரு கடுமையான தோல் நோய் ரோசாசியா (Rosacea). இது பெரும்பாலும் முகப்பரு என தவறாக கருதப்படுகிறது. இந்த நிலை தோல் வெடிப்புகள் வகையில் வருகிறது. இது தோல் முழுவதும் சிவப்பு திட்டுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிவப்பு தோல் திட்டுகள், கண் பிரச்சினைகள், வீக்கம், எரிச்சல் உணர்வு போன்றவை ரோசாசியாவின் அறிகுறிகள் ஆகும்.
மேலும் படிக்க | Zinc Diet: குழந்தைகளின் துத்தநாகக் குறைபாட்டைப் பூர்த்தி செய்யும் உணவுகள்
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZeeNews தகவல்களின் அடிப்படையில் மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளது. உண்மைத் தன்மைக்கு பொறுப்பில்லை)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR