சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை; தினமும் கண்டிப்பா போட்டுக்கோங்க

வெற்றிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெற்றிலையை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2022, 09:50 AM IST
  • வெற்றிலையை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • உடல் ஆரோக்கியம் பலப்படும்
  • ஈறுகளில் உள்ள வலி அல்லது வீக்கத்தை நீக்கும்
சர்வ நோய்களையும் விரட்டும் வெற்றிலை; தினமும் கண்டிப்பா போட்டுக்கோங்க title=

வெற்றிலையை நாம் அடிக்கடி பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் இது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வெற்றிலையை மென்று தின்பதால் விறைப்புக் கோளாறு முதல் இன்னும் சில நோய்களும் சேர்ந்து தீருமாம். இதை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பலப்படும் என்பது வெகு சிலரே அறிந்திருப்பார்கள். எனவே இந்த தொகுப்பில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் என்னவென்று விளக்கமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

வெற்றிலையை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்

* வெற்றிலையின் உள்ளே ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் இருமல் பிரச்சனையை சமாளிக்கலாம். மேலும் இதை உட்கொள்வதால் தொண்டையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

* வெற்றிலை அடிபட்ட உடல் காயத்திற்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. காயம் விரைவாகக் குணமடைய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் வழக்கத்தைவிட அதிகமாகக் காயம் குறைய உதவுகிறது.

* வெற்றிலை வயிறு மற்றும் அஜீரண கோளாற்றைச் சரி செய்யப் பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது.

* ஈறுகளில் உள்ள வலி அல்லது வீக்கத்தை நீக்க வெற்றிலையும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம், ஈறுகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும் இது போன்ற பல பண்புகள் இதன் உள்ளே காணப்படுகின்றன.

* வெற்றிலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால்,தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது கொழுப்புச் சத்தை குறைக்க உதவும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனால் வெற்றிலையையும் தினமும் உண்டு வந்தால் உடல் எடை சீராக வாய்ப்புகள் அதிகம். 

* வெற்றிலையை மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இதன் இலைகளை மென்று உண்பதால் வாயில் மறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும்.

* வெற்றிலை முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு குளித்து வாருங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக செய்ய தலைமுடி உதிர்வு பிரச்சனை கட்டுப்படுத்தலாம்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News