உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறோம். அதிலும் ஓட்டப் பயிற்சி உடல் எடையை பராமரிப்பதற்கு மிகவும் ஏற்றது.
ஆனால், கோடைக்காலமான தற்போது ஓட்ட பயிற்சி செய்வது சிரமமாக இருக்கும். சிரமமில்லாமல் கோடையில் ஓட்டப் பயிற்சியை மேற்கொள்வது எப்படி தெரியுமா? இப்படித் தான்...
ஓடுவது சிறந்த உடற்பயிற்சி
உடலில் சில அங்குலங்கள் வரை விரவியிருக்கும் தொப்பையைக் குறைக்க விரும்பினாலும், உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பு அல்லது ஒட்டுமொத்தமாக உடல் எடையைக் குறைக்க நினைத்தாலும், உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
பழைய ஆடைகளுக்குப் பொருத்தமாக உடல் மெலிய வேண்டும் என்ற ஏக்கம் இல்லாத பெண்கள் குறைவாகவே இருப்பார்கள். உணவுக் கட்டுப்பாடு ஒரு நல்ல வழி என்றாலும், அது சில சமயங்களில் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.
எனவே, உடல் எடையை குறைக்கவும், அதிகப்படியாக உடலில் இருக்கும் கலோரிகளையும் எரிக்கவும், ஓடுவது சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஓட்டப்பயிற்சி தொடர்பாக சரியான தகவல்களை அறிந்திருப்பது அவசியம். அறிவதுடன், அதை பின்பற்ற வேண்டியதும் அவசியமாகும்.
ஓட்டப்பயிற்சி செய்யும் நேரத்தின் முக்கியம்
வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ளிட்ட பல காரணங்களால் கோடையில் ஓடுவது கடினம் என்று கூறப்படுகிறது. ஹீட் ஸ்ட்ரோக் அல்லது நீரிழப்பு நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, சரியான நேரத்தில் ஓடுவது நல்லது. நீங்கள் காலை 5-7 மணிக்குள் ஓடுவது அல்லது மாலை 6 மணிக்குப் பிறகு ஓட்டப் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.
உடலின் நீர்ச்சத்தை பரமாரிக்க வேண்டும்
வெப்பமான காலநிலையில் ஓட்டப் பயிற்சி செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது, உடலில் இருந்து நீரிழப்பு அதிகமாகி நிலைமையை மோசமாக்கும். இஞ்சி இடுப்பழகியாக விரும்பி, உடலின் நீர்ச்சத்தை கோட்டி விட்டு விட வேண்டாம்.
பொதுவாக, ஓடத் தொடங்குபவர்கள், இடையில் தண்ணீர் இடைவேளை எடுக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு பிரச்சனையாக இருக்காது என்றாலும், வெப்பமான காலநிலையில் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாற்லாம். வெப்பமான கோடை நாட்களில், உங்கள் வொர்க்அவுட்டிற்கு முன்பும், இடையிலும், பின்பும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்தை பரமரிக்க வேண்டும்.
மேலும் படிக்க | கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.?
வெப்பநிலை மாற்றம்
கோடைக்காலத்தில், வெளிப்புற வெப்பநிலை மட்டுமல்ல, உட்புற வெப்பநிலையும் உங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்தும். அதாவது, கோடையில் ஓட்டப் பயிற்சி செய்வது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும், எனவே கோடை காலத்தில் தினமும் ஓடுவது என்பது சரியான யோசனையாக இருக்காது.
ஒரு நாள் விட்டு, மறுநாள் என அதிகபட்சம் வாரத்தில் நான்கு நாட்களுக்கு என ஓட்டப் பயிற்சியைக் கட்டுப்படுத்தவும். ஓடாத நாட்களில் நீங்கள் சில லேசான பயிற்சிகளை செய்யலாம்.
சன்ஸ்கிரீன் அவசியம்
சூரியனின் புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் மற்றும் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரும பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் கோடை காலத்தில் அதிகம். இந்த பிரச்சனையைக் குறைக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. மேலும், பருத்தித் துணி அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR