Home Remedies For Constipation: மலச்சிக்கல் இந்த நாட்களில் பரவலாக காணப்படும் ஒரு உடல் கோளாறாக உள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்து, ஒருவரது வயிறு சரியாக சுத்தம் ஆகவில்லை என்றால், அந்த நபரின் மனநிலை மோசமாவது மட்டுமல்லாமல், அவருக்கு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. நீண்ட நாட்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீடித்தால், அது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற பல வகையான மலமிளக்கிகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் இதை சரி செய்யலாம். இதற்கு நாம் உட்கொள்ளும் உணவில் சிறப்பு கவனம் செலுத்தினால் போதும். சில விதைகளின் உதவியுடன் மலச்சிக்கலை சரி செய்யலாம். மலச்சிக்கலில் இருந்து பெரிய அளவில் நிவாரணம் அளித்து வரிற்று பிரச்சனைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதைகளை பற்றி இங்கே காணலாம்.
ஆளிவிதைகள்
மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆளி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளது. இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இது தவிர ஆளிவிதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை செரிமான அமைப்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
மேலும் படிக்க | குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தையின் உயரம் அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை
சியா விதைகள்
சியா விதைகள் எடை இழப்பு மற்றும் செரிமான அமைப்புக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றன. சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது தண்ணீரில் கலக்கும்போது ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது. சியா விதைகளை உட்கொள்வதால், மலம் மிருதுவாகி, குடல் வழியாக எளிதாக செல்ல வழி பிறக்கும். இது தவிர இதில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
சூரியகாந்தி விதைகள்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது நன்மை பயக்கும். ஏனெனில் இவற்றில் லேசான மலமிளக்கி விளைவுகளும் இருக்கின்றன. இதனால் மலம் கழிப்பது எளிதாகிறது. இதுமட்டுமின்றி, சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இது செரிமான அமைப்பை சீராக இயக்க உதவுகிறது.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இவற்றை உட்கொள்வதால் மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். பூசணி விதைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. பூசணி விதைகள் செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளை தளர்த்த உதவுகின்ன்றன. இது குடலின் இயக்கங்களை எளிதாக்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நினைவற்றல் முதல் உடல் பருமன் வரை... தினமும் 100 கிராம் மக்காச்சோளம் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ