Best Juices For Vitamin B12: நமது உடல் ஆரோக்கியமாக இருக்க பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின்கள் மிக முக்கியமானவை. நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வகையான வைட்டமின்கள் அவசியமாகின்றன. இவற்றில் வைட்டமின் பி12 மிக முக்கியமானது.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு
வைட்டமின் பி12 -இன் குறைபாடு உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும். பி-12 குறைவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. வைட்டமின் பி-12 உடலின் டி.என்.ஏ. -வுக்கு இன்றியமையாத ஒரு அம்சமாக உள்ளது. வைட்டமின் பி12 குறைபாட்டைச் சமாளிக்க பல சைவ உணவுகளை நாம் உட்கொள்ளலாம். அவற்றில் சில சாறுகளும் அடங்கும். இவற்றின் மூலம் எளிய வழையில் இந்த குறைபாட்டை சரி செய்யலாம். இந்த சாறுகளை, ஒரு கிளாஸ் அளவு தொடர்ந்து 21 நாட்களுக்கு குடித்து வந்தால், வைட்டமின் பி12 உடலில் சேரும்.
வைட்டமின் பி12 குறைப்பாட்டை சரி செய்ய உதவும் 5 சாறுகள்:
பீட்ரூட் சாறு (Beetroot)
பீட்ரூட் இரும்புச்சத்துக்கான இயற்கை மூலமாக பார்க்கப்படுகின்றது. இதன் சாற்றை 21 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள வைட்டமின் பி12 குறைபாட்டை நிச்சயம் குணப்படுத்தலாம். பீட்ரூட் B12 இன் முக்கிய ஆதாரமாக உள்ளது. இது செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால் இரத்த ஓட்டமும் மேம்படுகின்றது.
கேரட் சாறு (Carrot)
குளிர்காலம் கேரட் சாறு பருக சிறந்த காலமாக பார்க்கப்படுகின்றது. கேரட்டில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிகமாக உள்ளன. இதில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கேரட் ஜூஸ் கண் பார்வையையும் மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...
மாதுளை சாறு (Pomegranate)
மாதுளையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகின்றது. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. தினமும் இதை சாப்பிடுவது நல்ல பலன் தரும். வைட்டமின் பி12 இன் குறைபாட்டைப் போக்க, மாதுளை சாற்றை தினமும் வெறும் வயிற்றில் 21 நாட்களுக்கு குடிக்கலாம்.
கீரை சூப் (Spinach)
பாலக், கேல் கீரை ஆகியவற்றின் சாறு, அல்லது சூப்பில் இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை அதிகமாக உள்ளன. இதை தினமும் உட்கொண்டு வந்தால், வைட்டமின் பி12 கிடைப்பது மட்டுமின்றி, முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கும் இது உதவும். பாலக் கீரை மற்றும் கேல் கீரையின் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகளும் நீக்கப்படும்.
ஆப்பிள் சாறு (Apple)
ஆப்பிள் ஒரு சத்தான பழம், இது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகின்றது. இதன் சாறை தினமும் பருகி வந்தால், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இந்த ஜூஸை 21 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், வைட்டமின் பி12 குறைபாட்டை எளிதில் சரி செய்யலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ