சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள்

Diabetes Control Tips: இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான உணவை உட்கொள்வது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 10, 2024, 04:44 PM IST
  • இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்கள்.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள சில சூப்பர் பழங்கள் title=

Diabetes Control Tips: நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை பூரணமாக குணமாக்க முடியாது. எனினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பின்பற்றினால், இந்த நோயை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதே சமயம் உடலுக்கு பல வித ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, சரியான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

நாவல் பழம்

நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். அதில் முதலிடம் வகிப்பது நாவல் பழம். ஆயுர்வேதத்தில் நாவல் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த பழமாக (Health Tips) கருதப்படுகிறது. நாவல் பழம் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு என்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், இதில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளதன் காரணமாக, இன்சுலின் ஹார்மோனை உடல் சிறப்பாக பயன்படுத்துகிறது. நாவல் பழங்கள், விதைகள் மற்றும் இலைகள் என அனைத்தும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையாக ஆயுர்வேதத்தில், பயன்படுத்தப்படுகின்றன.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து உணவை மெதுவாக ஜீரணிக்க உதவுகிறது. இதனால், உணவு ஊண்ட பின் இரத்தத்தில் சர்க்கரையின் திடீர் அதிகரிப்பதைத் தடுக்கிறது. இது தவிர, ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை இதயம் ஆரோக்கியத்தில் இருந்து, கொழுப்பை கரைப்பது வரை பலவேறு வழிகளில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | இன்பமான பாலியல் வாழ்க்கை வேணுமா? இந்த ஊட்டச்சத்துகள் முக்கியம் - உடனே நோட்ஸ் எடுங்க!

பேரிக்காய்

பேரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதுவும் மிகவும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழமாகும். பேரிக்காய் சாப்பிடுவது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் எடையையும் குறைக்கிறது.

கொய்யா

நீரிழிவு நோயாளிகள் அதிக நார்ச்சத்துடன், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள பழங்களை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், கொய்யாப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும். கொய்யா மட்டுமின்றி, அதன் இலைகள் சேர்த்து கொதிக்க வைத்த நீர் கூட சர்க்கரை நோய்க்கு அருமருந்து. மேலும், கொய்யா சாப்பிடுவதால் உடல் எடை குறைவதுடன், உடலில் இன்சுலின் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதுவும் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழம் என்பதால் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எலும்புகளையும் வலுவாகக் உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால், இரத்தத்தில் சக்கரை அளவு திடீரென அதிகரிப்பதில்லை. குறைந்த கிளைசெமிக் குறீயீடு கொண்ட பழமான இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் பயமின்றி சாப்பிடலாம்.

அத்திப்பழம்

நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அத்திப்பழத்தில் காணப்படுகின்றன. இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழம் என்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News