வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

வாழைப்பழத்தின் உதவியால் கூந்தலை ஆரோக்கியமாக்குங்கள், வீட்டிலேயே கெரட்டின் க்ரீமை இப்படி செய்யுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2022, 02:41 PM IST
  • வாழைப்பழ கெரட்டின் கிரீம்
  • கெரட்டின் கிரீம் பயன்படுத்தும் முறை
  • கெரட்டின் கிரீம் நன்மைகள்
வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம் title=

பெரும்பாலான பெண்கள் முடி தொடர்பான பிரச்சனைகளால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பெண்கள் சில சமயங்களில் பார்லருக்குச் சென்று விலையுயர்ந்த அழகு சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதுடன், சில சமயங்களில் பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் கூந்தலில் அதிக ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் முடியின் தோற்றத்தை கெடுத்துவிடும். மேலும் முடி சேதமடையக்கூடும். அதனால்தான் பல பெண்கள் ஹேர் ஸ்பா ஹேர் கெரட்டின் அல்லது பல்வேறு வகையான சிகிச்சைகளை அவ்வப்போது தலைமுடிக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் முடிக்கு நன்மை பயக்கும் ஹேர் மாஸ்க் ஐ வீட்டிலேயே தயார் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன்படி கெரட்டின் கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் சிலிக்கா காரணமாக, இது நமது முடியை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது. 

மேலும் படிக்க | இளநரை, பொடுகுப்பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும் 

ஹேர் கெரட்டின் கிரீம்

தேவையான பொருள்: இரண்டு வாழைப்பழங்கள், 2 முதல் 3 டீஸ்பூன் பழைய அரிசி, இரண்டு ஸ்பூன் தேங்காய் பால், ஒரு முட்டை, ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்.

இந்த கிரீமை கூந்தலில் தடவ முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு மூன்று ஸ்பூன் சமைத்த அரிசியை எடுத்து அதனுடன் துருவிய வாழைப்பழத்தை சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய்ப்பால் கலந்து தலைமுடியில் நன்றாக தடவவும். பின் அதில் முட்டையின் வெள்ளைப் பகுதியை போட்டு, இந்தக் கலவையை நன்றாக அரைக்கவும். இப்போது கடைசியாக ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

பயன்படுத்தும் முறை
இந்த கிரீம் உங்கள் தலைமுடியில் பயன்படுத்துவதற்கு முன், முடியை நன்கு கழுவவும், இதன் பிறகு இந்த கிரீமை தலைமுடியில் பயன்படுத்தவும். இந்த கிரீமை தடவிய பின் சிறிது நேரம் முடியை அப்படியே வைக்கவும்.

நன்மைகள்
வறண்ட கூந்தல் உள்ளவர்கள் இந்த கிரீமை உபயோகிக்கலாம், இதன் உதவியுடன் கூந்தல் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறும். சுருட்டை முடிக்கும் இந்த கிரீம் நல்லது என்று கருதப்படுகிறது. இது முடியை மென்மையாக்குவதுடன் ஈரப்பதமாக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News