கண் பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்! ஆரோக்கியமான கண்களுக்கு இவை அவசியம்

Eyesight Betterment Foods: கண் பராமரிப்புக்காக பல ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் சில    

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 23, 2023, 02:26 PM IST
  • கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவிக்குறிப்புகள்
  • உணவுமுறையை மேம்படுத்தினால் கண் பார்வை மேம்படும்
  • கண்ணின் திறனை மேம்படுத்தும் உணவுகள்
கண் பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்! ஆரோக்கியமான கண்களுக்கு இவை அவசியம் title=

கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகள்: இந்த 3 பொருட்களை இன்று முதல் உங்களுடைய தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள், கண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக, கண்பார்வை மங்கலாகவோ அல்லது குறைவாகவோ தெரிந்தால், இதை முயற்சி செய்து பார்த்தால், ஆச்சரியமான முன்னேற்றத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.

உங்கள் உணவில் மேற்கொள்ளும் மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் 3 விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்பார்வையை அதிகரிக்கும் என்றால், ஏன் முயற்சித்துப் பார்க்கக்கூடாது?

ஆரோக்கியத்திற்கு அடிப்படை நல்ல உணவு என்பது ஒருபுறம் என்றால், நீண்ட நேரமாக மொபைல் போன் அல்லது லேப்டாப் பயன்படுத்துவதால் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. கண்களில் வலி மற்றும் கிட்டப்பார்வை கோளாறுகள், மூப்படைவதற்கு முன்னரே ஏற்படுகிறது.

மேலும் படிக்க | எலுமிச்சைத் தோலில் என்ன இருக்கு? அலட்சியம் வேண்டாம்! சுகாதார பொக்கிஷமே இருக்கு

இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, இந்த உணவு மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்.  கண் பார்வையை மேம்படுத்த இந்த மூன்று பொருட்களை தினமும் சாப்பிடுங்கள்.

கண்களின் பார்வைத் திறனை அதிகரிக்கும் முட்டை
முட்டை வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, ஈ மற்றும் துத்தநாகம் இதில் ஏராளமாக உள்ளது. இதனை உட்கொள்வதால் உடலுக்கும் புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி லுடீன், ஜியாக்சாந்தின் போன்ற சத்துக்களும் இதில் உள்ளதால் கண்பார்வை வலுவாக இருப்பதோடு கண்ணாடி தேவையில்லை.

மேலும் படிக்க | கோடையிலும் பிரிட்ஜில் இந்த பழங்களை மறந்துகூட வைக்காதீங்க..

ஆரோக்கியமான கண்களுக்கு கேரட்
கண்களின் சக்தியை அதிகரிப்பதில் கேரட்டுக்கு ஈடு இணையில்லை. கேரட்டுகளில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின்  கண்பார்வையை அதிகரிக்கிறது. அதோடு, கண்களில் வலி இருந்தால் அதையும் சீர் செய்கிறது. கேரட் கண்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. பொதுவாக, கேரட் குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும், ஆனால் தற்போது கோடைக் காலத்திலும் கேரட் கிடைக்கிறது.  

பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் கண்பார்வை அதிகரிக்கிறது. இதனுடன், கண்களின் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகளிலிருந்தும் பாதாம் கண்களை பாதுகாக்கிறது. தினசரி பாதம் பருப்பை சாப்பிட்டால் கண் பார்வை மேம்படும். 3-4 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News