எவ்வளவு நல்லதா இருந்தாலும் மாதுளையின் மறுபக்கம் கொஞ்சம் பிரச்சனை தான்!

Pomegranate juice side effects in Tamil: யாரெல்லாம் மாதுளம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதையும், மீறி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2024, 08:38 PM IST
  • மாதுளம் பழச்சாறு குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
  • நீரிழிவு நோயாளிகள் மாதுளம்பழ ஜூஸ் குடிக்க வேண்டாம்
  • கர்ப்பிணிகள் மாதுளை சாறு குடிக்க வேண்டாம்
எவ்வளவு நல்லதா இருந்தாலும் மாதுளையின் மறுபக்கம் கொஞ்சம் பிரச்சனை தான்! title=

Pomegranate juice Bad Side: மாதுளையின் பழங்கள் மட்டுமல்ல, மாதுளம் பூக்கள், மதுளம் பழத் தோல், மாதுளம் பழத்தோலின் உட்புறமுமாய் உள்ள பஞ்சு போன்ற நார்ச்சத்து என அனைத்துப் பொருட்களும் மருத்துவ பண்பு வாய்ந்தவை.  மாதுளம்பழத்தில், புரதம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் சி என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

மாதுளம்பழம் மற்றும் அதன் சாற்றை உட்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுவதுடன், செரிமான அமைப்பும் மேம்படும். ஆனால், எவ்வளவு தான் நல்லது என்றாலும், சிலருக்கு மாதுளம்பழம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
யாரெல்லாம் மாதுளம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதையும், மீறி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம். 

மாதுளம் பழச்சாறு குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி, இரத்தத்தை விருத்தி செய்யும் மாதுளம்பழம் ஏற்படுத்தும் பிரச்சனைகள், சில நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதில் நீரிழிவு, ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனைகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். அதேபோல,  கர்ப்பிணிகளும் மாதுளம்பழத்தை உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் மாதுளம்பழ ஜூஸ் குடிக்க வேண்டாம்
மாதுளை சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். ஆனால் அளவுக்கு அதிகமாக மாதுளம் பழச்சாற்றை பருகினால், அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கணிசமாக அதிகரிக்கச் செய்யும். எனவே, மாதுளை சாற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

மேலும் படிக்க | தயிர் சாதம்..... சுவையிலும் ஆரோக்கிய நன்மைகளிலும் டாப் டக்கர்!!

இரத்த அழுத்தம்
தேவைக்கு அதிகமாக மாதுளை சாறு குடித்தால், இரத்த அழுத்த அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளை சாறு பருகுவதைத் தவிர்க்கவேண்டும். அதிக அளவு மாதுளை சாறு உட்கொள்வது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து வயிற்றுப்போக்கை அதிகரிக்கும்.  
 
கர்ப்பிணிகள் மாதுளை சாறு குடிக்க வேண்டாம்
கர்ப்ப காலத்தில் மாதுளை சாறு குடித்து வந்தால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு சரியாகும். ஆனால் மாதுளை சாறு சில உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கும். மாதுளம்பழ ஜூஸ் தயாரிக்கும் போது, ​​தோலின் சில பகுதிகள் அதில் கலந்துவிட்டால் அது கர்பிணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

சருமப் பிரச்சினைகள்
மாதுளை சாப்பிடுவதால் சிலருக்கு சரும பிரச்சனைகள் வரலாம். மாதுளை சாறு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தோலில் தடிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, சரும அலர்ஜி இருப்பவர்கள் மாதுளை சாறு சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
 
ஒவ்வாமை பிரச்சனை
சிலருக்கு மாதுளை சாறு சாப்பிட்ட பிறகு அலர்ஜி ஏற்படும். இந்த நிலையில், வறட்சி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மாதுளைக்கு ஒவ்வாமை இருந்தால், மாதுளை சாற்றை உட்கொள்ள வேண்டாம்.

மாதுளம்பழ ஜூஸ் குடிப்பவர்களில் சிலருக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல், வயிற்று வலி என சில பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

மருந்துக்கு எதிர்வினை
மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், கொலஸ்ட்ரால் மருந்துகள் மற்றும் சில வலி நிவாரணிகளுக்கு மாதுளம்பழம் எதிர்வினையாற்றும். எனவே, நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படியே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | Alzheimer: பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானது! எச்சரிக்கும் ஆய்வு தரும் பகீர் தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News