முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 6 விஷயங்கள் காரணமாக இருக்கலாம்

Back Pain: முதுகுவலி தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் இளைஞர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2022, 07:06 PM IST
  • முதுகு வலியை எவ்வாறு கண்டறிவது?
  • இடுப்பின் பின்பகுதியில் வலி அதிகமாக இருக்கும்.
  • காலையில் எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்க வேண்டாம், பக்கமாக திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும்.
முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 6 விஷயங்கள் காரணமாக இருக்கலாம் title=

தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்க்கை முன்பை விட சுகமாக மாறிவிட்டது. எனினும், இந்த நவீன வாழ்க்கை முறையால் மனித உடலில் இதுவரை இல்லாத பல பிரச்சனைகள் வரத் தொடங்கியுள்ளன. 

அதில் ஒன்றுதான் முதுகுவலி. முதுகுவலி தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால் இளைஞர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சிரமம் இல்லாத வாழ்க்கையே முதுகு வலிக்குக் காரணம்

காரிலோ, பேருந்திலோ பயணம் செய்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று அலுவலகம் சென்றதும் வசதியான நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யும் பழக்கத்தால் பெரும்பாலானோர் முதுகுவலிக்கு ஆளாகிறார்கள். சிரமமே இல்லாமல் அனைத்து பணிகளும் நடப்பதே ஒரு விதமான பிரச்சனை ஆகி விடுகிறது. முதுகுவலியால் வரும் பிரச்சனை மிகப்பெரியது. 

முதுகுவலியின் அறிகுறிகள் என்ன? அதிலிருந்து எவ்வாறு நிவாரணம் பெறுவது என இந்த பதிவில் காண்லாம். 

முதுகு வலியை எவ்வாறு கண்டறிவது?

- இடுப்பின் பின்பகுதியில் வலி அதிகமாக இருக்கும்.
- நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்வதால் வலி ஏற்படும். 
- முதுகெலும்பின் நடுவில் இடைவெளி குறைவதால் வலி ஏற்படுகிறது.
- தசைகளில் நீட்சி மற்றும் எழுந்து உட்காருவதில் சிரமம்.

மேலும் படிக்க | புற்றுநோயைக் கண்டறியும் எறும்புகள் - ஆய்வில் கண்டுபிடிப்பு

முதுகு வலி வராமல் தடுக்க எளிய வழிகள்

1. காலையில் எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்க வேண்டாம், பக்கமாக திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். 
2. மென்மையான படுக்கையில் தூங்க வேண்டாம், முடிந்தவரை கடினமான படுக்கையில் தூங்குங்கள், இது முதுகு எலும்பு வலியிலிருந்து நிவாரணம் தரும்.
3. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நபராக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பது வலியிலிருந்து விடுபட உதவும். 
4. நீண்ட ஹீல்ஸ் கொண்ட செருப்புகளைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும்.
5. உடற்பயிற்சி செய்யுங்கள், இது உங்கள் உடலின் வலிக்கு அதிக நிவாரணம் தரும்.
6. நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்கவும், அடிக்கடி உங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருங்கள்.

சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்

சிறிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் சரியான பராமரிப்பு மூலம் முதுகு வலியை தவிர்க்கலாம். இந்த வேகமான வாழ்க்கை முறையில், உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கினால், முதுகு வலியால் அதிகமாக அவதிப்படுவதைத் தவிர்க்கலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இள வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க செய்ய வேண்டியவை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News