உங்கள் உணவில் சில உணவுகளைச் சேர்க்காததால் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்களை நீங்கள் இழக்கலாம்.
கார்போஹைட்ரேட், கொழுப்பு அல்லது சர்க்கரையை தவிர்ப்பது, உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு நடைமுறை. அளவுக்கு மிஞ்சினால் தான் அமிர்தமும் நஞ்சு. எந்த ஒரு உணவையும் அளவுடன் உண்டால் அது ஆரோக்கியத்தின் அடிப்படை, அதை மிகைப்படுத்தினால் கெட்டது என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | விளக்கெண்ணெய் என்னும் ஆமணக்கு எண்ணெயின் அற்புத சக்தி
உங்கள் உணவில் சில உணவுகளைச் சேர்க்காமல் இருப்பதன் மூலம், உணவு வழங்க வேண்டிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்களை நீங்கள் இழக்கிறீர்கள். கார்போஹைட்ரேட், கொழுப்பு அல்லது சர்க்கரையை நீக்குவது, உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உணவு தொடர்பான கட்டுக்கதைகளை உடைத்தெறிகிறார்.
அரிசி சாதம் உண்ணுதல், மாம்பழம் மற்றும் நெய் ஆகியவை தொடர்பாக பேசும் அவர், "அரிசி, மாம்பழம் அல்லது நெய் உண்ண பயப்படாதீர்கள்- உங்கள் உடலின் தேவைக்காக சாப்பிடுங்கள். ஆனால், எதையும் மிதமாக உண்ணுங்கள் " என்று அவர் கூறுகிறார்.
நம்புவதை நிறுத்த வேண்டிய கட்டுக்கதைகள்
டாக்டர் டிக்சாவின் கூற்றுப்படி, அரிசி கொழுப்பை உண்டாக்குவதில்லை, ஆனால் உங்கள் பேராசைதான். தினமும் அளவாக சாதம் சாப்பிட்டால், உடல் பருமன் அதிகரிக்காது. “தினசரி அரிசியை உட்கொள்வது நிச்சயமாக உங்களை கொழுப்பாக மாற்றும், உங்களுக்கு நீரிழிவு மற்றும் இதய பிரச்சினைகளைக் கூட கொடுக்கும்.
பட்டை தீட்டாத அரிசி, சிவப்பு அரிசி, சோனா மசூரி அரிசி, கைக்குத்தல் அரிசி, ஜீரணிக்க எளிதானது, குடலில் கனமாக இருக்காது மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்காது. எனவே சாப்பிடும் அரிசியை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பது சிறந்தது. பாசுமதி அரிசியை சேர்த்துக் கொள்ள வேண்டாம். எடை குறைக்க விரும்புபவர்களுக்கு அரிசிக் கஞ்சி சிறந்தது என இவர் பரிந்துரைக்கிறார்.
மாம்பழம் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது
“மாம்பழங்களோ, வாழைப்பழம், சீதாப்பழம் போன்ற இனிப்புப் பழங்களோ நீரிழிவு நோய்க்கு வழிவகுக்காது. உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற உங்கள் பேராசை, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையே நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது" என்று டாக்டர் டிக்சா கூறுகிறார்.
நெய் கொலஸ்ட்ராலா? யார் சொன்னது?
டாக்டர் டிக்சாவின் கூற்றுப்படி, நெய் கொலஸ்ட்ராலை மேம்படுத்துகிறது. டாக்டர் டிக்ஸா கூறுகிறார், "A2 பசுவின் நெய் உங்கள் நல்ல கொழுப்பை (HDL) மேம்படுத்துகிறது, மேலும் வைட்டமின் A, Vit D, Vit E மற்றும் Vit K போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பை உடலில் பராமரிக்க உதவுகிறது." அதிகபட்ச நன்மைகளைப் பெற A2 பசுவின் பால் மற்றும் நெய்யை பரிந்துரைக்கிறார்.
“எருமை நெய்யை நான் பரிந்துரைக்கவில்லை, ஏனெனில் அது ஓரளவு கொழுப்பு மிக்கது. எனவே, இது அனைவருக்கும் பொருந்தாது. உடல் எடையை அதிகரிக்க விரும்புவோருக்கு எருமை நெய் நல்லது” என்று டாக்டர் டிக்சா கூறுகிறார்.
மேலும் படிக்க | பிசைந்து வைத்த சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது சரியா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR