தைராய்டு பிரச்சனை இருக்கா... ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’சொல்லுங்க!

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2023, 06:16 PM IST
  • தைராய்டு காரணமாக, உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது.
  • ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும்.
  • தைராய்டு காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது.
தைராய்டு பிரச்சனை இருக்கா...  ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’சொல்லுங்க! title=

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும். தைராய்டு காரணமாக, உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. மறுபுறம், தைராய்டு காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. உங்களுக்கும் தைராய்டு பிரச்சனை இருந்தால் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதனை எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்நிலையில் தைராய்டு பிரச்சனை இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேழ்வரகு 

சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். ஆனால், கேழ்வரகு  சாப்பிடுவது தைராய்டு நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டு வகையான தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுமே கேழ்வரகு உணவை தவிர்ப்பது நல்லது. ராகியை அதிக அளவில் எடுத்துக் கொள்வது தைராய்டு நோயாளிகளின் பிரச்சனையை அதிகரிக்கும்.

காபி

காபியில் உள்ள காஃபின் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் காபி உட்கொள்வதை தவிர்க்கவும். ஏனென்றால்,காலை வேளையில் காபியுடன் தைராய்டு மருந்துகளை எடுத்து கொண்டவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத தைராய்டு அளவு இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, தைராய்டு பிரச்சனை இருந்தால், காபி அதிகம் உட்கொள்வதை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

குறிப்பிட்ட சில காய்கறிகள்

ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை தைராய்டு பிரச்சனையை இருந்தால் காய்கறிகளை தவிர்க்க வேண்டும். இந்த காய்கறிகள் உடலில் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!

ஆல்கஹால்

ஆல்கஹால் எடுத்துகொள்வது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவுகள் மற்றும் உற்பத்தி செய்யும் திறன் இரண்டையும் பாதிக்க கூடும்.

மேலும், தைராய்டு மருந்தை உட்கொள்ளும் போது, இந்த மருந்தை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு இந்த மருந்தை உட்கொள்ளக்கூடாது. உணவிற்கு பிறகு எடுத்துக் கொண்டால், உடலில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும். தேநீர் அல்லது காபியுடன் தைராய்டு மருந்தை ஒருபோதும் உட்கொள்ளக் கூய்டாது. அப்படி செய்தால் பகக் விளை ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கொத்தமல்லி தண்ணீர்..! இதோ ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News