இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி 108 கிலோ எடையை குறைத்தார். தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறை மூலம் தன்னுடைய உடல் எடையை குறைத்த ஆனந்த் அம்பானி, மீண்டும் உடல் எடை போட தொடங்கியிருக்கிறார். இதற்கு மிக முக்கியமான காரணம், உணவு மற்றும் உடற்பயிற்சியில் மெத்தனமாக இருப்பதே. ஆனந்த் அம்பானிபோல் இல்லாமல் குறைந்த எடை மீண்டும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
தூக்கம்
நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஒருவரின் உடல் எடை அதிகரிப்பதிலும், குறைப்பதிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான தூக்கம் இல்லையென்றால் உங்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். இதனால் ஹார்மோன் சுரப்பியில் மாற்றம் உண்டாகி உடல் எடையில் கட்டுப்பாடு இல்லாமை உருவாகும். அதாவது உடல் எடை கூடத் தொடங்கும். உடல் எடை சீராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தூக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையுமா?
வெயிட் லிப்டிங்
உடல் எடையை குறைக்கும்போது அதிகம் வெயிட் லிப்டிங் எடுப்பார்கள். நீங்கள் அதனை செய்திருந்தால் உடனடியாக அதனை விட்டுவிடக்கூடாது. வெயிட் லிப்டிங்கை நீங்கள் விட்டால் நிச்சயமாக உங்களின் எடை கூடும். நீங்கள் எடுத்த பயிற்சி எல்லாம் வீணாகி மீண்டும் எடையை குறைக்க முதலில் இருந்து உங்கள் பயிற்சியை தொடங்க வேண்டியிருக்கும்.
இனிப்பு
உடல் எடையை குறைக்க ஆர்வம் காட்டுபவர்கள் அது குறைந்த பின்னர் மீண்டும் உணவு முறையில் ஒழங்கை கடைபிடிக்க தவறுகிறார்கள். அப்படி தவறும்பட்சத்தில் உடல் எடை கூடுவதை உங்களால் தவிர்க்க முடியாது. உங்களுக்கு எடை கூடாக்கூடாது என்றால் இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.
நொறுக்குத் தீனிகள்
நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது. நொறுக்குத் தீனிகள் தேவையற்ற கலோரிகளை உடலுக்கு கொடுப்பதால், அதனால் உடலுக்கு கேடு மட்டுமே ஏற்படும். எனவே, உங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருந்தால் நொறுக்குத் தீனிகளுக்கு இன்றே குட்பை சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் சிக்கலை எதிர்கொள்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை முறை
உணவுப் பழக்கத்தைப் போலவே மன அழுத்தம் உள்ளிட்டவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனதை மிகவும் இலகுவாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள முற்படுங்கள். தேவையற்ற சிந்தனை கூட உங்களுக்குள் மன அழுத்ததை ஏற்படுத்திவிடும். இத்தகைய அடிப்படையான விஷயங்களை தவிர்த்து நிம்மதியான வாழ்க்கையை முன்னெடுத்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ