நரம்புகள் - பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... ஜாதிக்காய் என்னும் இயற்கை வயாகரா...

பிரியாணியில் ஜாதிக்காய் சேர்க்கும் போது ஊரே மணக்கும். ஜாதிக்காயில் நரம்பை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளதோடு, நினைவாற்றலை பெருக்குதல், பாலியல் பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற எண்ணற்ற பலன்களை கொண்டது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 13, 2024, 12:30 PM IST
  • உடல் பருமனை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஜாதிக்காய்.
  • ஜாதிக்காய் கணையத்தின் செல்களை ஆக்டிவேட் செய்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
  • குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
நரம்புகள் - பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... ஜாதிக்காய் என்னும் இயற்கை வயாகரா... title=

ஜாதிக்காய் மருத்துவ குணங்கள் பல நிறைந்த அற்புதமான மசாலா. பிரியாணியில் ஜாதிக்காய் சேர்க்கும் போது ஊரே மணக்கும். ஜாதிக்காயில் நரம்பை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளதோடு, நினைவாற்றலை பெருக்குதல், பாலியல் பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற எண்ணற்ற பலன்களை கொண்டது ஜாதிக்காய்.

ஜாதிக்காயை இயற்கை வயாகரா என்று அழைப்பார்கள். ஏனென்றால் இது பாலுணர்வை தூண்டுவதுடன் ஆண்களின் விந்து எண்ணிக்கையின் தரம் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிக்கும் பண்பு கொண்டது. தாம்பத்தியம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. மன அழுத்தத்தை குறைத்து ரணரம்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. ஆன்டி ஏஜிங் பண்புகள் நிறைந்த ஜாதிக்காய் முதுமையை விரட்டி இளமையை தக்க (Anti Ageing Food) வைக்கும்.

உடல் பருமனை எரிக்கும் ஆற்றல் கொண்ட ஜாதிக்காய்

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் ஜாதிக்காயை சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் (Weight Loss Tips) உள்ளது. மேலும், செரிமான ஆரோக்கியத்தை இது வலுப்படுத்தும். வாயு தொல்லை மலச்சிக்கல் போன்ற குடல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடல் பருமன் குறைய குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்

மன அழுத்தத்திற்கு மருந்தாகும் ஜாதிக்காய்

மன அழுத்தம் மனச்சோர்வு, மன பதட்டம் ஆகியவற்றை நீக்கும் திறன் ஜாதிக்காய்க்கு உண்டு. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி நரம்புகளை ரிலாக்ஸ் செய்ய ஜாதிக்காய் உதவுகிறது. மேலும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்னும் ஹார்மோனை தூண்டும் ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. இதனால் தூக்கமின்மைக்கும் தீர்வு கிடைக்கும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் ஜாதிக்காய் 

ஜாதிக்காயை தொடர்ந்து உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது(Diabetes Control Tips). கணையத்தில் இன்சுலின் உற்பத்தி குறையும் போது, ​​இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. ஜாதிக்காய் கணையத்தின் செல்களை ஆக்டிவேட் செய்து இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் தொப்பையை கரைத்து எடையை குறைக்க... ஏலக்காயை இப்படி சாப்பிடுங்க

இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள இரும்புச்சத்து, மாங்கனிசு, பொட்டாசியம் ஆகியவை, ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதனால் உடலில் ஆற்றல் அளவும் குறையாமல் இருக்கும்.

நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்ட ஜாதிக்காய்

சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சேரும் நச்சுக்களை நீக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் ஜாதிக்காயில் நிறைந்துள்ளன. 

குறிப்பு: மருத்துவ குணங்கள் நிறைந்த ஜாதிக்காயை அளவிற்க்கு அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்து. இதனால் உங்கள் உடல் நிலைக்கு எந்த அளவு ஜாதிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து சாப்பிடுவதே நல்லது. இல்லை என்றால், வாந்தி குமட்டல், நெஞ்செரிச்சல், மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடலுக்கு ஆணிவேரான முதுகெலும்பு வலுவாக இருக்க... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News