Health News: சோயாவின் நன்மைகளை சொல்லி மாளாது, கண்டிப்பா சாப்பிடுங்க

Benefits of Soya: நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு சோயாபீனில் நன்மைகள் உள்ளன. பல வகைகளில் நாம் இதை நமது உணவில் சேர்க்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2022, 04:12 PM IST
  • சோயாபீன் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.
  • ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாட்டைப் போக்க சோயாபீன்ஸ் சாப்பிடலாம்.
  • சோயாபீனில் நிறைவுற்ற கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது.
Health News: சோயாவின் நன்மைகளை சொல்லி மாளாது, கண்டிப்பா சாப்பிடுங்க title=

உடல் ஆரோக்கியத்திற்கான பொக்கிஷம் சோயாபீன்: உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு இருந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக உடலை தொற்றுநோய்கள் எளிதாக பாதிக்கின்றன. 

உடலை வலிமையாக்க வைட்டமின்களுடன், புரதமும் அவசியம். சேதமடைந்த செல்களை சரிசெய்ய புரதம் உதவுகிறது. கொரோனாவுக்குப் பிறகு விரைவாக குணமடைய புரதச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. புரதத்திற்கு, சோயாபீன்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

சோயாபீன்களில் உள்ள புரதம்

சோயாபீன் மற்றும் அதன் தயாரிப்புகளில் போதுமான அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இது தாவர அடிப்படையிலான புரதத்தின் மூலமாகும். இது மற்ற புரதங்களை விட அதிக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உடலில் உள்ள புரதச் சத்து குறைபாட்டை சோயா உணவின் மூலம் எளிதாகப் பூர்த்தி செய்யலாம். இதனை உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாகி நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது.

மேலும் படிக்க | உடலின் நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்; தயாரிப்பது எப்படி 

சோயாபீன் புரதத்தின் சைவ மூலமாகும்

சைவ உணவு உண்பவர்களுக்கு, சோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் புரதத்தின் சிறந்த மூலமாகும். சோயாபீன் மற்றும் சோயாபீன் பால், சோயாபீன் எண்ணெய், சோயாபீன் சங்க்ஸ், சோயாபீன் பவுடர் ஆகிய சோயா தயாரிப்புகளை மக்கள் உட்கொள்ளலாம்.

சோயாபீனின் நன்மைகள்

- சோயாபீன் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.

- ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாட்டைப் போக்க சோயாபீன்ஸ் சாப்பிடலாம்.

- சோயாபீன் ஒரு லாக்டோஸ் மற்றும் பசையம் இல்லாத புரதமாகும்.

- சோயாபீனில் நிறைவுற்ற கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது.

இப்படி உணவில் சேர்க்கலாம்

சோயாபீன்ஸை பல வழிகளில் சாப்பிடலாம். சோயா நகெட்ஸ், டோஃபு, சோயா கிரானுல்ஸ், சோயா பால், சோயா மாவு மற்றும் சோயா நட்ஸ் என பல வகைகளில் இதை உட்கொள்ளலாம். சோயாபீனை காலை உணவு அல்லது மதிய உணவில் பயன்படுத்தலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஹூமோகிளோபினை உருவாக்கும் கீரை அவசியம் உங்கள் டயட்டில் இருக்கட்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News