பரங்கிக்காய்: பல வித ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷம்

Pumpkin Benefits: பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2023, 07:03 PM IST
  • இதில் வைட்டமின்கள் பி, சி ஆகியவை உள்ளன.
  • உடம்பில் உஷ்ணம் நீங்க இதை சாப்பிடலாம்.
  • இது சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு உதவும்.
பரங்கிக்காய்: பல வித ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷம் title=

பூசணி ஆரோக்கிய நன்மைகள்: காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. அவற்றை உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. அப்படி பல  வித நற்பயன்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காயை பற்றி இந்த பதிவில் காணலாம். சொல்லப்போனால், இதை ஒரு பழம் என்றும் கூறலாம். 

பூசணிக்காய்

இந்த பதிவில் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூசணிக்காயின் உள்ள நன்மைகளை பற்றி காணலாம். சிவப்பு பூசணிக்காய் பரங்கிக்காய் என்றும் அழைக்கப்படுகின்றது. இது குக்குர்பிடேசி எனப்படும் பூக்கும் தாவரங்களின் பூச்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் சுமார் 975 வகையான உணவு மற்றும் அலங்கார தாவரங்கள் உள்ளன. இந்த தாவரத்தில் பல வகைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், வெள்ளை பூசணி மற்றும் சிவப்பு பூசணி ஆகியவை மிகவும் பிரபலமான வகைகளாக உள்ளன. 

மேலும் படிக்க | சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!

பூசணி ஆரோக்கியமானதா?

பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது. இது பார்வைத் திறனை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டின் வளமான மூலமாகும். பரங்கிக்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், இது எடை இழப்புக்கும் உதவுகிறது. பரங்கிக்காய் உயிரணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆல்ஃபா கரோட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் நிறைந்துள்ளது.

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை கண்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

பரங்கிக்காயின் பிற குறிப்பிடத்தக்க நன்மைகள்:

- இதில் வைட்டமின்கள் பி, சி ஆகியவை உள்ளன.

- உடம்பில் உஷ்ணம் நீங்க இதை சாப்பிடலாம். 

- இது சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு பயனளிக்கும்.

- பித்தத்தை போக்க பரங்கிக்காய் உகந்தது.

- பரங்கிக்காய் பசியைத் தூண்டும்.

- இதனால் வயிற்று பிரச்சனைகள் சரியாகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News