பீட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகையாகும். அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. பீட்ரூட்டில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பொட்டாசியம் , மாவுச்சத்து , இரும்புச்சத்து, வைட்டமின் 12 என பல சத்துக்கள் நிறைந்து உள்ளன. வைட்டமின் 12 ரத்த அணுக்களின் உற்பத்திற்கு தேவைப்படும் சத்து. இது பீட்ரூட்டில் அபாரமாக இருக்கிறது. எனவே, பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த அணுக்களின் அளவு சீராக இருக்கும். பீட்ரூட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவையும் காணப்படுகின்றன. 10 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், 43 மில்லிகிராம் கலோரிகள் மட்டுமே உடலுக்கு கிடைக்கும். மேலும், இதில் 2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது என்பதால், உடல் எடையை இது அதிகரிக்காது. அதேபோல் இதில் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இது நமது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
பீட்ரூட்டை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கோண்டால், அதில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே, பீட்ரூட்டை ஆண்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், ஆண்மை அதிகரிக்கும். ஆண்மை குறைவு பிரச்சனை வராமல் இருக்கும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். பீட்ரூட் சாப்பிடுபவர்கள் அதன் சாற்றை குடிப்பதால் இரத்த அழுத்தத்தைக் (High Blodd Pressure) கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் கூட தாரளமாக பீட்ரூட்டை சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதால், உடலுக்கு இயற்கையான சர்க்கரை கிடைப்பது மட்டுமல்லாமல், செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.
தொடர்ந்து பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். பீட்ரூட்டில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், பீட்டேன், குளுதாதயோன் மற்றும் பெக்டின் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது, இது கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை அகற்ற உதவுகிறது. ஃபைபர் பெக்டின் கல்லீரலால் வடிகட்டப்பட்ட நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இது அழற்சி எதிர்ப்பு ஆற்றலைக் கொண்ட பெட்டாலின்கள் போன்ற சேர்மங்களையும் கொண்டுள்ளது. இது டீடாக்ஸ் செயல்பாட்டில் மிகவும் உதவியாக இருக்கின்றது.
மேலும் படிக்க | ’ரண கள்ளி’ பிபி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்
பீட்ரூட்டை பல வழிகளில் உட்கொள்ளலாம், அதை காய்கறிகள், சாலடுகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற வடிவில் உட்கொள்ளலாம். பலருக்கு இதன் ருசி பிடிக்காது, ஆனால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு தெரிந்தவர்கள் கண்டிப்பாக தினசரி உணவில் இதை சேர்த்துக்கொள்வார்கள். அதில் பீட்ரூட் ஜூஸ் அனைவரும் விரும்பி குடிக்கக் கூடியது. பீட்ரூட் ஜூஸ் செய்வதும் சுலபமே. பீட்ரூட், இஞ்சி, ஆப்பிள், சிறிது புதினா இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு பிறகு அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம். தினசரி ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 7 நாளில் 7 கிலோ எடை இழக்கும் சவாலுக்கு தயாரா... ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ