பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்

Benefits Of Yellow Moong Dal:மஞ்சள் நிற பயத்தம் பருப்பு நமது உடலுக்கு அளிக்கும் அபரிமிதமான நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 01:41 PM IST
  • பயத்தம் பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்.
  • பயத்தம் பருப்பை சாப்பிடுவது உங்கள் செரிமான சக்தியை பெரிய அளவில் மேம்படுத்தும்.
  • இதனை உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம் title=

பயத்தம் பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்: நாம் அனைவரும் கண்டிப்பாக அன்றாட உணவில் மஞ்சள் நிற பயத்தம் பருப்பை பயன்படுத்துகிறோம். இந்த பருப்பு நமது உடல் ஆரோக்குயத்துகு பல விதங்களில் நன்மை பயக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவை உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைப்பதிலும், மலச்சிக்கலில் இருந்து நமக்கு நிவாரணம் தருவதிலும் இது மிகவும் உதவியாக இருக்கும். மஞ்சள் நிற பயத்தம் பருப்பு நமது உடலுக்கு அளிக்கும் அபரிமிதமான நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

பயத்தம் பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்: 

ஜீரண சக்தி

பயத்தம் பருப்பை சாப்பிடுவது உங்கள் செரிமான சக்தியை பெரிய அளவில் மேம்படுத்தும். இதனுடன் இதனை உட்கொள்வதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். இந்த பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது உங்கள் வயிற்றில் வாயுவின் உருவாக்கத்தை அனுமதிக்காது.

மேலும் படிக்க | உடல் பருமன் அதிமாக இருந்தால் ஜாக்கிரதை: இந்த நோய்கள் வரக்கூடும்!! 

தோலுக்கு நன்மை பயக்கும்

பயத்தம் பருப்பு உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உடலின் தோலின் இறுக்கத்தை பராமரிக்க உதவும் தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. இதனுடன் இதில் இரும்புச் சத்தும் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலிலும் இரத்த சிவப்பணுக்கள் உருவாகின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்

பொட்டாசியம் இரும்புச் சத்து நிறைந்த பயத்தம் பருப்பை உட்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்திற்கும் உதவுகிறது. இதை சாப்பிடுவதால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு சீராகிறது. மஞ்சள் பயத்தம் பருப்பில் இருக்கும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை உங்கள் உடலில் சேர விடாது. இதனுடன், இதை உட்கொள்வதன் மூலம், மாரடைப்பு அபாயத்தையும் தவிர்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பயத்தம் பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. எப்பொழுதெல்லாம் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பாசிப்பருப்பை சாப்பிட வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சாப்பிட்டவுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News