Weight Loss: ஓமம் இருந்தா போதும், ஓடிப்போகும் அதிக எடை, இப்படி சாப்பிட்டு பாருங்க

Weight Loss: எடையைக் குறைக்க ஓமம் எந்த வழியில் பயன்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 5, 2022, 02:14 PM IST
  • எடை இழப்புக்கு ஓமம் நல்லது.
  • இதன் காரணமாக செரிமான அமைப்பும் நன்றாக வேலை செய்கிறது.
  • ஓமம் உட்கொள்வதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
Weight Loss: ஓமம் இருந்தா போதும், ஓடிப்போகும் அதிக எடை, இப்படி சாப்பிட்டு பாருங்க title=

எடை இழப்புக்கு ஓமம்: ஓமம் பல வித நல்ல பண்புகளை கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஆரோக்கியத்துக்கு பல வித நன்மைகள் கிடைக்கின்றன. உடல் எடையை குறைப்பதிலும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கிறது.

ஓமம் அனைவரது வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொதுவான பொருளாகும். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுத்து தோற்றுப்போனவர்களுக்கு, ஓமம் ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும். பல நோய்களைத் தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடையைக் குறைக்க ஓமம் எந்த வழியில் பயன்படும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

தினமும் காலையில் ஓமம் சாப்பிடுங்கள்

ஓமத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. ஓமத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

- வெந்நீரில் ஓமத்தை கலந்து குடிக்கலாம். 

 - இது தவிர, இதை உணவிலும் பயன்படுத்தலாம். 

- ஓமத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடல் எடை குறையும். 

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் 

- இதை உட்கொள்வதன் மூலம், நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. 

- இதன் காரணமாக செரிமான அமைப்பும் நன்றாக வேலை செய்கிறது. 

- ஓமம் உட்கொள்வதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

ஓமம் உட்கொள்ளும்போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளவும்

- விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பி, ஓமத்தை அதிக அளவில் உட்கொள்வது அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

- கோடைக்காலத்தில் அதிக அளவில் ஓமத்தை உட்கொண்டால், அது உங்கள் வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், இதை கட்டாயம் சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News