ஓய்வூதியதாரர்களுக்கு 20%-100% ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள், முழு விவரம் இதோ

Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களும் ஓய்வூதிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.

Additional Pension: 80 முதல் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவரகள். 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 90 முதல் 95 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். 95 முதல் 100 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.

1 /11

மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை மத்திய அரசு இனி வழங்கும். பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கருணை உதவித்தொகை என்ற பெயரில் மத்திய அரசு கூடுதல் ஓய்வூதியம் வழங்கும்.

2 /11

80 வயதை எட்டிய மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களும் ஓய்வூதிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.

3 /11

CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின்படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை நிறைவு செய்த பிறகு, விதிகளின் கீழ் ஓய்வூதியம் மற்றும் கருணைக் கொடுப்பனவு (Compassionate Allowance) வழங்கப்படும்.  

4 /11

80 முதல் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை பெறுவரகள். 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30 சதவீத கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.

5 /11

90 முதல் 95 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். 95 முதல் 100 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும்.

6 /11

சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்த ஓய்வூதியம் பெறுவோர் 1 ஆகஸ்ட் 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் 20 சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஆகஸ்ட் 1, 1942 இல் பிறந்த ஓய்வூதியம் பெறுபவர்களும் ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தில் இருபது சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.

7 /11

ஓய்வூதியம் பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டிய முதல் நாள் முதல் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை அமலுக்கு வரும் என ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வயது அதிகரிக்கும் போது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிக்க உதவும் வகையில் இந்த கூடுதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

8 /11

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளும் புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தாமதமின்றி சரியான பலன்களைப் பெறுவது உறுதி செய்யப்படும்.  

9 /11

ஓய்வூதியதாரர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது.  மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயதுக்கு முன்னரே கூடுதல் ஓய்வூதியம் அளிக்கபப்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

10 /11

தற்போதைய விதியின்படி, 80 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் 20% உயர்த்தப்படுகிறது. இது சரியான அளவு அல்ல. 65 வயது முதல் 75 வயது வரை அதிக பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை விடுத்து 80 வயதிற்குப் பிறகு ஓய்வூதியத்தை அதிகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.