நாம் காதல் அல்லது திருமணம் போன்ற ஏதாவது ஒரு உறவில் நுழைகையில் கண்டிப்பாக அவர்களுடன் உடல் அளவில் நெருங்க வேண்டும் என நினைப்பது வழக்கம். ஒரு பக்கம் இது நம்மை உற்சாகப்படுத்தினாலும் இன்னொரு பக்கம் நமக்கு பதற்றத்தையும் உருவாக்கும். “நம் பார்ட்னருக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், நம்மால் அந்த நபர் சுகம் அடைவாரா, நம்மிடம் அவர் எதிர்பார்பது என்ன..” போன்ற பல கேள்விகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இவை அனைத்தும் மிகவும் இயல்பானவையே. இதை நினைத்து பயப்படுவதை விட்டுவிட்டு உடலுறவிற்கு தயாராவது எப்படி..? இதோ சில டிப்ஸ்!
1.உடலுறவுக்கு முன்னர் ஹிண்ட் கொடுங்க!
படுக்கைக்கு வந்தவுடன் யாரும் முதலில் ‘அந்த’ நிலைக்கு தங்களை தயார் படுத்தியிருக்க மாட்டார்கள். சில சமயங்களில் அப்படியே முன்னேற்பாடுகள் இல்லாமல் பார்ட்னருடன் படுக்கைக்கு சென்றாலும் முழுமையாக அவர்களால் உடலுறவு மனநிலைக்கு உடனே சென்று விட முடியாது. இதை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் உங்கள் பார்ட்னருக்கு ஹிண்ட் கொடுக்க ஆரம்பியுங்கள். அது, Sexting ஆக இருக்கலாம். அல்லது, நீண்ட முத்தமாக இருக்கலாம். அவர்களை பார்த்து மயக்கும் வகையி கண் அடிப்பதாகவும் இருக்கலாம். இதையெல்லாம் செய்வதால் நம் உடலும் மனதும் கண்டிப்பாக உடலுறவு மனநிலைக்கு தயாராகிவிடும். இது, உடலுறவு சுகத்தையும் அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க | இது காதலா? காமமா? ரிலேஷன்ஷிப்பில் குழப்பத்தை தவிர்க்க..சில சிம்பிள் டிப்ஸ்..!
2.பாதுகாப்பு முக்கியம்:
உடலுறவு வைத்துக்கொள்ளும் முன் பாதுகாப்புக்கான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். கர்பம் அல்லது பால்வினை நோய்களை தடுக்க வேண்டும் என்றால் ஆணுரைகள் மற்றும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கர்பத்தடுப்பு மாத்திரைகள் முக்கியம். ‘அந்த’ சமயத்தில் இதையெல்லாம் மறந்து விட்டால் கண்டிப்பாக பின்னாடி பிரச்சனைதான். மேலும் உடலுறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்ட பிறகு அதையெல்லாம் தேடிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக சுகம் பெற முடியாது.
3.சிறந்த மனநிலையை உருவாக்க..
சிறந்த உடலுறவிற்கு சிறப்பான மனநிலையும் முக்கியம். உடலுறவு வைத்துக்கொள்ள இருக்கும் அறை பெரிதும் வெளிச்சம் புகாத இடமாக இருக்க வேண்டும், அதிக வெளிச்சம் ஆனந்தத்தை கெடுக்கும். இதனுடன் உங்கள் பார்ட்னருக்கும் உங்களுக்கும் பிடித்த இசையை ஒலிக்க செய்யலாம். லைட் மிகவும் குறைவான வெளிச்சத்தில் இருக்க வேண்டும். வாசனை மிகுந்த மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். நல்ல ரூம் ஸ்ப்ரேவை உபயோகிக்கலாம். இது, கண்டிப்பாக உடலுறவு சுகத்தையும் அதிகரிக்க உதவும்.
4.மூளையை தயார் படுத்துங்கள்:
உடலுறவு, மனதில் இருந்தும் மூளையில் இருந்தும்தான் ஆரம்பிக்கிறது. அதைப்பற்றி நம் எண்ணக்குதிரைகளை ஓட விட வேண்டும். உடலுறவு குறித்த கதைகளை படிக்கலாம். இதை இரவில்தான் செய்ய வேண்டும் எகிற அவசியம் இல்லை. ஒரு நாளில் அவ்வப்போது இவ்வாறு செய்தாலே போதும். கண்டிப்பாக இரவில் சுகம்தான்.
5.லிஸ்ட் போடுங்கள்:
படுக்கையறையில் உங்கள் பார்ட்னருடன் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை எல்லாம் ஒரு லிஸ்ட் போடுங்கள். பேப்பர் பேனா எடுத்து எழுத வேண்டாம். மனதில் எழுதி கொள்ளலாம். அது எந்த விஷயமாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடலுறவில் செய்ய பல விஷயங்கள் இருக்கிறது. அவற்றை கற்றுக்கொண்டு உங்கள் பார்ட்னருக்கும் கற்றுக்கொடுங்கள்.
6.அழகாக காட்டிக்கொள்ளுங்கள்:
உங்களை அழகுப்படுத்திக் கொள்வது படுக்கையறை சுகத்தை பன்மடங்காக அதிகரிக்க உதவும். அது சாதாரணமாக ஒரு வாசனை திரவியத்தை பூசிக்கொள்வதாக இருக்கலாம். அல்லது லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனங்களை பூசிக்கொள்வதாக இருக்கலாம். இதை உங்கள் பார்டனருக்காக மட்டுமன்றி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யலாம்.
7.மூச்சு பயிற்சி:
ஒரு நிலையாக மனதை நிறுத்தி மூச்சுப்பயிற்சி செய்வது உடலுறவு வாழ்க்கையை கண்டிப்பாக உயர்த்தும் என ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனதை ஒருநிலைப்படுத்துவது, உச்சமடைய உபயோகிப்பதகவும் நம் உடல் மீது நமக்கு இருக்கும் கவனத்தை இவை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் உடலுறவு வைத்துக்கொள்ளும் முன்பு, சில நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்வது நலம்.
மேலும் படிக்க | படுக்கையறை டிப்ஸ்: ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ